பனையூர் பரபரக்க பட்ஜெட் ஆலோசனை.. இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியுள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். இது விஜய் ஆட்சி என சொல்லுங்கள் என்று கரூரில் முதலமைச்சர் கூறினார். தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 நடைபெறவுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

    Advertisement

    தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்

    தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. நாளை மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் தவெகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளார்கள். பட்ஜெட்டின் போது எப்படி செயல்பட வேண்டும், பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    English Summary

    Tamilnadu Budget to submit on Tomorrow. TVK MLA's Meeting will held at Panaiyur Today Evening.