அன்பில், கே.என்.நேரு மட்டுமல்ல.. அடுத்த இலக்கு திமுகவின் 3 முன்னாள் அமைச்சர்கள்! விஜய் திட்டம் என்ன?

  • சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து நடக்கவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக திமுக ஒரு ஊழல் கட்சி என்று மக்கள் மத்தியில் நிறுவ முதல்வர் விஜய் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக தெரிய வந்துள்ளது. கே.என்.நேரு வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து, அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி மற்றும் சேகர்பாபு குறி வைக்கப்படலாம் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன.

    Advertisement

    தமிழ்நாட்டில் அடுத்ததாக விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற முடியவில்லை. அதிலும் இரு தொகுதிகளிலும் கூட்டணியின்றி திமுக 2வது இடத்திற்கு முன்னேறியது.

    Advertisement

    இதனால் தவெக தலைமை கடுமையான அப்செட்டாகியது. தற்போது அடுத்தக்கட்ட இடைத்தேர்தலுக்கு தவெக தலைமை தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தால், மக்கள் மத்தியில் விஜய்யின் இமேஜ் அதிகரிக்கும் என்பதோடு, மக்கள் பணத்தை தொட்டால் சும்மாவிட மாட்டேன் என்ற வார்த்தையையும் நிரூபித்தது போல் ஆகிவிடும் என்று கணக்கு போடுகின்றனர்.

    ஏற்கனவே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தவெக தீவிரமாக உள்ளது. மறுபக்கம் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இது திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்காக செய்வதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனால் தவெகவின் இலக்கு திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மட்டுமல்ல.. 5 தொகுதி இடைத்தேர்தலும் தான். இதனால் அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், மூர்த்தி, சேகர்பாபு ஆகியோரின் வீடுகள் மற்றும் இடங்களிலும் சோதனை நடக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சேகர்பாபு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

    ஆனால் இம்முறை ஆதாரங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் விஜய் பிடிவாதமாக உள்ளார். மூர்த்தி தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் மூலமாக மக்களிடையே திமுக ஒரு ஊழல் சக்தி என்று நிறுவ விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான பணிகள் கோட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது.

    English Summary

    Targeting DMK Ex Ministers: CM Vijay Moves to Project DMK as Corrupt Before Upcoming By Election