வீரன், விஎஸ்ஒபி, ஹனிபீ, உள்ளிட்ட 11 மதுபான வகைகளை விற்கத் தடை.. டாஸ்மாக் அதிரடி உத்தரவு!

  • சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வீரன், VSOP உள்ளிட்ட பிராண்டு பிராந்தி வகைகள் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது டாஸ்மாக். டாஸ்மாக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11 வகையான மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரம் குறித்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் மாதிரியை சோதனை செய்தனர்.

    Advertisement

    11 மது வகைகளுக்கு தடை

    டாஸ்மாக் மது கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் 11 வகையான மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களில் அதிக அளவில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த வகை மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    10 வகை பிராந்தி மற்றும் ஒரு ரம் வகை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் இத்தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்கள்/ மொத்த விற்பனையாளர்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்டின் 11 வகை மதுபானங்களை குடோனிலிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட மதுபான வகைகள்

    1. VSOP எக்ஸ்ஷ்னாவ் கோல்டு பிராந்தி (VSOP EXSHNAW GOLD BRANDY)
    2. லூயிஸ் வெர்னான்ட் XO பிளெண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
    3. மெக் டோவெல்ஸ் VSOP பிராந்தி (Mc DOWELLS VSOP BRANDY)
    4. நம்பர் 1 மெக் டோவெல்ஸ் ஃபைன் பிராந்தி (NO.1 Mc DOWELLS FINE BRANDY)
    5. மென்'ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (MENSCLUB DELUXE BRANDY)

    Advertisement

    6. ஹனி பீ ஃபைன் பிராந்தி (HONEY BEE FINE BRANDY)
    7. என்ரிகா VSOP செலக்ட் பிராந்தி (ENRICA VSOP SELECT BRANDY)
    8. என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் XO பிராந்தி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
    9. என்ரிகா பிரீமியம் ஃபிரெஞ்ச் பிராந்தி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
    10. வெரியன் ஸ்பெஷல் பிராந்தி (VEREAN SPECIAL BRANDY)
    11. என்ரிகா ஓல்ட் இன்டி கிளாசிக் டார்க் ரம்(ENRICA OLD INDIE CLASSIC DARK RUM)

    English Summary

    TASMAC has banned the sale of certain brandy brands, including 'Veeran' and 'VSOP', at its liquor outlets. This decisive order follows inspections by Food Safety Department officials, which confirmed the presence of artificial flavorings in 11 types of liquor sold at TASMAC shops.