21 வயதிற்குபட்டோருக்கு நோ என்ட்ரி.. 100 மீட்டரில் பார்.. டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்

  • சென்னை: தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. திமுக, அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கொள்முதல், பார் டெண்டர் ஆகியவற்றில் விதிமீறல் நடந்ததாக புகார் எழுந்தது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பார்களுக்கான புதிய டெண்டர் விடாமல், பழைய டெண்டர்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் வயது வரம்பு, அமைவிடம் உள்பட பார்களுக்கான விதிகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் டாஸ்மாக் பார் அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தல் காரணமாக ஜூன் மாதம் வரை அனுமதி நீட்டிக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் டாஸ்மாக் பார்களுக்கான அனுமதி தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து, டிசம்பர் வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    100 மீட்டர் தூரத்தில்

    பார்களுக்கான அனுமதி வழங்கும் விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளனர். அதில், அதன்படி டெண்டர் மூலம் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தள்ளியோ பார் அமைந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வளர்ச்சி, நகர திட்டமிடல் ஆணையங்களில் வணிகம் அல்லது தொழிற்சாலைகளுக்கு தூர கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மலைப் பகுதிகளில் ஒருங்கிணைந்து பழங்குடி மேம்பாட்டு திட்டங்களில் இந்த பார்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் பாரில் நிச்சயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாரும் 20 மீ தரைதள பரப்பை கொண்டிருக்க வேண்டும். குடிநீர், கைகழுவும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். பார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பார்களுக்குள் அமர்வதற்கு போதுமான மேஜை, நாற்காலிகள் அமைக்க வேண்டும்.

    Advertisement

    21 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடை

    மதுபானம் அருந்துவது தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு. பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்கிற வாசகம் இருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. 21 வயதிற்குட்பட்டோரை பாருக்குள் அனுமதிக்க கூடாது, அவர்களை பணியிலும் அமர்த்த கூடாது. பார்களை கோட்ட ஆயத்தீர்வைக்கு குறைவான பதவிகளில் இருப்போர், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வட்டாட்சியர் பதவிக்கு குறைவான பதவிகளில் இருப்போர் ஆய்வு செய்யலாம்.

    ஆய்வுகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் அந்த பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதிய விதிகள் படி, பார்களை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி இந்த மாதம் கோரப்படும். அடுத்த மாதம் இறுதியில் அனுமதி வழங்கப்படும். 2027 ஜனவரி மாதம் முதல் ஒப்பந்தத்தை கைப்பற்றிய நிறுவனங்கள் பார்களை நடத்துவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Tamil Nadu has introduced new rules for TASMAC bars, including a ban on entry and employment for those under 21, mandatory basic facilities and a 100-metre location restriction.