டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘செக்’.. கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்.. தவறு தொடர்ந்தால் டிஸ்மிஸ்!

  • சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தால் முதல் முறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாவது முறை கண்டறியப்பட்டால் தற்காலிக நீக்கம் செய்வதோடு அபராதம் வசூலிக்க வேண்டும். மூன்றாவது முறையாக கூடுதலாக பணம் வாங்குவது தெரிய வந்தால் நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் மதுபான விற்பனையை முழுமையாக தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மீண்டும் புகார்கள் எழுந்து வருகின்றன.

    Advertisement

    சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வை அறிவித்தது. இதனால், நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த கூடுதல் வசூல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கூடுதல் வசூல் குறித்த புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கை குறித்து திருத்திய வழிகாட்டுதல்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவர். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்.

    Advertisement

    கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரங்கள் அனைத்தும் அவர்களின் அதிகாரப்பூர்வ பணிப்பதிவேட்டில் (Service Register) பதிவு செய்யப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையையே விற்க வேண்டும் என்ற விதியை மீறுபவர்கள் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் உறுதியாக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    TASMAC administration has announced that strict action will be taken against employees who sell liquor at prices higher than fixed rate. Employees found selling at inflated prices for a third time will be dismissed.