பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. அரசுக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!

  • சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக நியாயமான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை, எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார்களை தொடர்ந்து, இனிமேல் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Advertisement

    இருப்பினும் தொடர்ந்து புகார்கள் எழுந்ததால், டாஸ்மாக் கடைகளில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால், தற்காலிகமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம், பணியிடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூலை 24 ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி எச்சரிக்கை விடுத்திருந்தது. அதுமட்டுமன்றி தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், குற்றக் குறிப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5000.. அக்டோபர் 1 முதல் அமல்.. புதிய ரூல்ஸ் எதற்காக தெரியுமா?
    Advertisement

    அதன்பிறகும் தொடர்ந்து கூடுதலாக பணம் வசூலித்ததாக புகார்கள் வந்ததால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் ஒரே நாளில் முதற்கட்டமாக 67 பேர், பின்னர் 157 பேர் என மொத்தம் 224 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து, டாஸ்மாக் பணியாளர்களின் பணியிடை நீக்கத்திற்கு காரணமான இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் செயலாளர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், "இயற்கை நீதியைப் பின்பற்றாமல், பணியாளர்களுக்கு எதிராக எந்தவொரு தண்டனை நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது. நியாயமான, முறையான விசாரணைக்குப்பிறகு தான், தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு தொழிலாளர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க போதுமான அவகாசத்தை வழங்க வேண்டும்.

    Advertisement
    டாஸ்மாக் கடைகளுக்கு ரூ.5000.. அக்டோபர் 1 முதல் அமல்.. புதிய ரூல்ஸ் எதற்காக தெரியுமா?

    எனவே, இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும், தண்டனை விதித்தாலும், அது இயற்கை நீதி, பணி விதிகள் மற்றும் சட்ட விதிகளைப் பின்பற்றியே இருக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கு நியாயமான விசாரணை நடத்தாமல், எந்த தொழிலாளரும் தண்டிக்கப்படவோ, இடமாற்றம் செய்யப்படவோ, பணிநீக்கம் செய்யப்படவோ கூடாது" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

    English Summary

    Madras High Court has ordered that TASMAC employees should not be dismissed for charging excess amounts on liquor bottles without a fair inquiry being conducted.