டாஸ்மாக் ஊழியர்களுக்கு கவனத்திற்கு.. இனிமேல் ட்யூட்டியில் யூனிபாஃர்ம்! அக்கவுண்டுக்கே வரும் ரூ.6000!

  • சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 15 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் சீருடை அணிதல் அமலுக்கு வருகிறது. 3 செட் சீருடைக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6.000 ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை, நேவி புளு பேண்ட்; துணை விற்பனையாளருக்கு Beige கலர் சட்டை, டார்க் புளு பேண்ட். சீருடையில் இடது நெஞ்சில் டாஸ்மாக் லோகோ இடம்பெறும் என டாஸ்மாக் எம்டி நந்தகுமார் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளாராம்.

    Advertisement

    இதுதொடர்பாக டாஸ்மாக் எம்டி நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

    Advertisement

    அதன்படி, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை முறையை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருவருக்கு மூன்று செட் சீருடைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

    டாஸ்மாக் சீருடை

    மாநிலம் முழுவதும் சீருடைகளை கொள்முதல் செய்தல், அளவு எடுத்தல், தைத்தல் மற்றும் வினியோகம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, சீருடை படி வழங்கப்படும். துணி மற்றும் தைப்புக் கட்டணம் உள்பட ஒரு செட்டிற்கு ரூ.2 ஆயிரம் வீதம், ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

    Advertisement

    டாஸ்மாக் சீருடை விதிமுறை

    மேற்பார்வையாளரின் சீருடை, சட்டை இளம் நீலம் வண்ணத்திலும், பேண்ட் கடற்படை நீலத்திலும் இருக்கும். விற்பனையாளர், உதவி விற்பனையாளரின் சீருடை சட்டை-இளம்பழுப்பு நிறத்திலும், பேண்ட்-கரும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை வேலை நேரத்தில் கட்டாயம் அணிய வேண்டும்." என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் விக்னேஷ்

    டாஸ்மாக் பணியாளர்களுக்கு, 10,000 ரூபாய் ஊதிய உயர்வு, கடைகளில் துாய்மை பணி மேற்கொள்ள, மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இனி, ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவர் என, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், சமீபத்தில் அறிவித்தார்.

    Advertisement

    கூடுதல் பணம்

    இருப்பினும், பல கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக, மது பிரியர்கள் புகார் தெரிவித்த நிலையில், தமிழகம் முழுதும் மது கடைகளில், கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற, 67 பணியாளர்களை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து, டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து பல இடங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படவில்லை என சொல்கின்றனர் குடிகாரர்கள்.

    டாஸ்மாக் ஊழியர்கள்

    இந்த நிலையில்தான் டாஸ்மாக் ஊழியர்களை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக சீருடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மெயின்டைன் செய்வதற்கு 5000 ரூபாய் பணம், டாஸ்மாக் பணியாளர்கள் ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சீரூடைக்கு என தனியாக 6000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேண்டியதை செய்தால் அவர்கள் கூடுதல் பணம் தர மாட்டார்கள் என்ற அடிப்படையிலே அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருவதாக தகவல்கள் சொல்கின்றன.

    English Summary

    Tasmac employees will receive ₹6,000 annually for three uniform sets, with mandatory uniforms starting November 15, 2026.