டாஸ்மாக்கில் இனி 10 ரூபாய் வாங்கவே முடியாது.. புகார் அளிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம்

  • சென்னை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் அதிகம் வாங்குவதை தடுக்க தவெக அரசு ஓரளவு சாத்தியமான வழிகளை உருவாக்கி உள்ளது. முதல் வழி, டாஸ்மாக் ஊழியர்களின் ஊதியத்தை இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. 33000 முதல் 28000 என்கிற அளவில் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. இனிமேலும் டாஸ்மாக் ஊழியர்கள் பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்கினால் அவர்களை மீது புகார் அளிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆகஸ்ட் 31 முதல் தொடங்கிப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் தொகை வாங்கினால் 3 மாத சஸ்பெண்ட், அடுத்தாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டாஸ்மாக் - பொதுமக்கள்/ நுகர்வோர்களின் புகார்கள் மற்றும் குறைகள் - கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள்

    Advertisement

    டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சனைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில், டாஸ்மாக் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 31.08.2026 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் விசாரணைகளைத் தெரிவிப்பதற்காகக் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-889-2015 மற்றும் அதிகாரப்பூர்வ WhatsApp எண் +91-7397720230 ஆகியவற்றைத் தொடர்புகொள்ளலாம். கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் (24 × 7) பொதுமக்கள்/நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் மற்றும் தொடர்புகளைப் பெறும்.

    Advertisement

    மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை பின்வரும் இணைப்புகள் மூலம் அணுகலாம்:

    Facebook: TASMAC Official

    X (முன்னாள் Twitter): @TasmacOfficial

    Instagram: @tasmac_official

    YouTube: TASMAC Official

    மேற்கண்ட கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை, WhatsApp மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலம் பொதுமக்கள்/நுகர்வோர்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை டாஸ்மாக் நிறுவனத்திடம் எளிதாகத் தெரிவிக்க இயலும். அவ்வாறு பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னதாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்கனவே 25 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருந்தது. அது போதாது என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தநிலையில் சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக்கோரிக்கை நேற்று நடந்தது இதில் 'டாஸ்மாக்' பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டார்.
    அதன் விவரம் வருமாறு:-

    ஊதிய உயர்வு எவ்வளவு?

    23 ஆண்டுகளாக 'டாஸ்மாக்' கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 1-ந்தேதி (அதாவது இன்று) முதல் சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33 ஆயிரத்து 23, விற்பனையாளர்களுக்கு ரூ.30 ஆயிரத்து 284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28 ஆயிரத்து 680 ஆகவும் ஊதியமாக வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.486.90 கோடி செலவு ஏற்படும்.

    Advertisement

    பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

    ஆண்டுதோறும் 3 சீருடைகள் துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.

    வார விடுமுறை

    'டாஸ்மாக்' கடைகளில் தூய்மை பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரங்களில் இயங்கும் கடைகளுக்கு ரூ.5 ஆயிரமும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கடைகளுக்கு ரூ.4 ஆயிரமும், கிராமப்புறக் கடைகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.

    'டாஸ்மாக்' கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேரப் பணி ஒதுக்கீடு, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்தில் 2 நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுமுறை ஆகியவை வழங்கப்படும்.

    Advertisement

    டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் தகுதியுடைய 250 பணியாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

    தொடர்ந்து அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், 'இனிமேல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இனிமேல் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கூட டாஸ்மாக் பணியாளர்கள் 3 மாதங்கள் தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள். இதே தவறை மீண்டும் செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.' என்ற எச்சரித்தார்.

    English Summary

    TASMAC has launched a 24×7 customer grievance service from 31 August 2026. Consumers can now report overcharging, service deficiencies and other complaints throug. TASMAC says complaints will be forwarded to the concerned officials, with action taken and solutions provided within a specified time frames