அடடே..சூப்பர் மாற்றம்! மொத்தமாய் மாறும் டாஸ்மாக்! இனி மட்டி சரக்குக்கு எண்ட்.. நினைத்தது கிடைக்கும்!

  • சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் குடிகாரர்கள் தாங்கள் விரும்பும், மதுபானங்கள் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே கிடைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகளில் மதுபான தேவை பட்டியலை சமர்ப்பிப்பதில் புதிய நடைமுறை பின்பற்றப்பட இருப்பதாகவும், இதனால் குடிகாரர்கள் விரும்பும் அனைத்து மதுபானங்களும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்த தீர்வு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகளும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் சில்லறை விற்பனை வாயிலாக ஒரு நாளைக்கு சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் நிலையில் வார விடுமுறை மற்றும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

    குறிப்பாக புத்தாண்டு தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை மிக அதிக அளவில் இருக்கும். குறிப்பாக தீபாவளி சந்தர்ப்பத்தில் 3 அல்லது 4 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ.750 கோடிக்கும் அதிகமான விற்பனை நடக்கும். புத்தாண்டு, பொங்கல் சமயங்களிலும் டாஸ்மாக் விற்பனை சாதனை எண்ணிக்கையை கடக்கும். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

    Advertisement

    அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களின் மதுபானங்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊழல் இருப்பதாக குடிகாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கடந்த ஆட்சி காலத்தில் 11 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மதுபான வகைகளையும், 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்து வருகிறது.

    இந்நிலையி, தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்திருக்கும் நிலையில் அனைத்து மதுபான நிறுவனங்களிடம் இருந்தும் சம அளவில் மதுபானம் வாங்கப்பட்டு அனைத்து வகை மதுக்களும் விற்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.

    Advertisement

    அதில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து மதுக்கடைகளிலும் என்னென்ன மது தேவைப்படுகிறது என்பதை ஆன்லைன் அப்ளிகேஷன் மூலம் அனுப்ப வேண்டும் என முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்டமேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் கையடக்க கருவி வாயிலாக கடைக்கான மதுபான தேவைப்பட்டியலை ஆன்லைன் மூலம் பெற உள்ளது.

    இதன் மூலம் அனைத்து வகை மற்றும் பிராண்டுகளின் மதுபானங்கள் சமமான அளவில் தேவைப்பட்டியில் இருக்கும். வாடிக்கையாளர்கள் என்னென்ன மதுக்களை விரும்பி கேட்கிறார்கள் என்பது குறித்து இதில் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட பிராண்ட் மற்றும் மது வகைகளை 20 சதவீதம் வரை சேர்க்கலாம். ஆனால் எந்த பட்டியலையும் நீக்க முடியாது. ஒவ்வொரு கடைக்கும் அதிகாரப்பூர்வ செல்போன் எண் இருக்கும் நிலையில் அந்த எண்ணுக்கு வரும் ஓடிபி பதிவு செய்து தேவைப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

    Advertisement

    சூப்பர்வைசர் சமர்ப்பிக்கும் தேவைப்பட்டியிலே இறுதியானதாக கருதப்படும். அந்த தேவைப்பட்டியலை அடிப்படையாக வைத்து கடை மேலாளர் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் மேற்பார்வையாளர்கள் மாவட்டம் மேலாளர்கள் மண்டல மேலர்கள் என ஆய்வு நடத்தப்பட்டு தேவையான மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என கூறியிருக்கின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக கிடைக்காத டாஸ்மாக் மதுபான வகைகள் இனி கிடைக்கும் என சொல்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.

    English Summary

    TASMAC will introduce an online demand-list system from September 1, aiming to make more liquor brands available based on customer preferences.