“24 மணி நேரத்தில் அப்படி என்ன நடந்தது? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? - அதிமுக ஐடி விங் அட்டாக்

  • சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 11 வகை மது பானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? என தவெக அரசுக்கு அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்? - அதிமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் இயங்கி வரும் என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ஆலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகையில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து, விஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (பிளெண்டட் பிராந்தி), நெ.1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் ஃபிரெஞ்சு பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி ஆகிய 10 பிராந்தி வகைகளும், என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் என்ற ரம் வகையையும் மறுஅறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    இந்த நிலையில், மேற்கண்ட மதுபான வகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் மேற்கண்ட 11 பிராண்ட் மதுபான வகைகளும் வழக்கம்போல் விற்பனை செய்யப்படவுள்ளது.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் பிரிவு 36(3)(b)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, மேற்படி 11 மதுபான பிராண்டுகள் மீது பிறப்பிக்கப்பட்ட விற்பனைத் தடை உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக FSSAI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் ஆர். கஜலட்சுமி ஐ.ஏ.எஸ்., டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், இந்த 11 வகை மதுபானங்களின் மீதான தடை நீக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    11 பிராண்ட் மதுபான வகைகள் மீதான தடை நீக்கம் குறித்து அதிமுகவின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. தலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் விக்னேஷை குறிப்பிட்டு அதிமுக ஐ.டி விங் வெளியிட்டுள்ள பதிவில், "கொடுத்த தடையை வெறும் 24 மணி நேரத்தில் நீக்கும் அளவிற்கு அப்படி என்ன நடந்தது? பயமா? பதற்றமா? பேக்கரி டீலிங்கா? என்னவா இருக்கும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

    English Summary

    AIADMK IT Wing has questioned the TVK government, asking what exactly transpired to cause the ban on 11 types of liquor at TASMAC outlets to be lifted within a mere 24 hours. Is it fear? Panic? Any bakery dealing? What could it be? — the AIADMK IT Wing has asked.