Tasmac: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மூடல்!

  • சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 4) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல வாக்கு எண்ணிக்கை நாளான அக்.9 அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

    Advertisement

    அதைத்தொடர்ந்து, அக்டோபர் 6 (செவ்வாய்க்கிழமை) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 9 (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

    மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 6 ஆம் தேதி இந்த 2 தொகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றை சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும், வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நாளான 9 ஆம் தேதியும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    It has been announced that TASMAC shops and private bars will remain closed in connection with the Maduranthakam Assembly constituency by-election. The shops will be closed for three days starting tomorrow (October 4) and also on October 9, the day of vote counting.