டாஸ்மாக்கின் Tasmac2e.in ஆன்லைன் புக்கிங்.. ரேஷனுக்கு இல்லை, மது பிரியருக்கு வசதி? வெடித்த எதிர்ப்பு

  • சென்னை: டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் 'Tasmac2e.in' என்ற புதிய வெப்சைட்டை தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை முறைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த நகர்வுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்துள்ளன.

    Advertisement

    Tasmac2e.in' என்ற புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆன்லைனிலேயே புக்கிங் செய்து, கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்திய பிறகு, தங்களுக்கு விருப்பமான டாஸ்மாக் கடைகளுக்கு சென்று நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

    Advertisement

    இதற்கு மாநிலம் முழுவதுமுள்ள 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக அறியவும், குறைந்தபட்ச சில்லறை விலையை மீறி கூடுதல் தொகை வசூலிப்பதை கட்டுப்படுத்தவும் இந்த முறை உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக்கின் Tasmac2e.in'

    இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் 21 வயது நிறைவடைந்ததை உறுதி செய்ய வேண்டும். 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளையோ அல்லது கடை எண், மாவட்டம் மூலமாகவோ தேடலாம்.. முக்கியமாக, சென்னையில் உள்ள ஒருவர் திருநெல்வேலியில் உள்ள கடையில் கூட முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இதில் உள்ளது.

    Advertisement

    இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியை ரேஷன் கடைகளுக்கு பயன்படுத்தாமல், டாஸ்மாக் கடைகளுக்குப் பயன்படுத்துவது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்து விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.. தமிழக அரசின் இந்த நகர்வுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பும் கண்டனங்களும் வெடித்துள்ளன.

    ஆன்லைனில் மதுபானம்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து பேசும்போது, "ஆன்லைனில் மதுபான முன்பதிவை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது. நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் வாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்குத் தான் வழிவகுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement

    அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களைப் பெறும் நடைமுறையைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தித் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்கவே இதுபோன்ற தவறான திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகப் பல்வேறு தலைவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    மதுப்பழக்கத்தை அதிகமாக்குமே?

    சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. இந்த முன்பதிவு முறை புதிய குடிகாரர்களை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது, பொதுமக்கள் மற்றும் பெண்களின் கூச்சத்திற்குப் பயந்து நேரடியாக மதுக்கடைகளுக்கு செல்ல தயங்கியவர்கள், சிறுவர்கள், பெண்கள் இனி ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று எளிதாக வாங்கிச் செல்ல இது வழிவகுக்கும்.. எனவே இது சமூகத்தில் மதுப்பழக்கத்தை மேலும் தீவிரமாக்கும் என்றெல்லாம் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    Advertisement

    கோர்ட் போட்ட ரசீது உத்தரவு

    இந்த கண்டனங்களும், எதிர்ப்புகளும் ஒருபுறமிருக்க, மறுபுறம் டாஸ்மாக் நிர்வாகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. "டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.. மதுபானம் வாங்குவோருக்கு ரசீதுகள் வழங்கப்படுவதில்லை. எனவே, டாஸ்மாக் கடைகளில் விற்கும் அனைத்து மதுபானங்களுக்கும் கட்டாயமாக ரசீது வழங்கப்பட வேண்டும்" என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Tasmac2e.in Online Liquor Booking Benefits and No Such Convenience for Ration Shops, Why for Liquor Buyers? Backlash Erupts