சென்னை: வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 குதிரை திறன் மோட்டாருக்கு மொத்த தொகையான ரூ.2½ லட்சத்தில், ரூ.2¼ லட்சம் மானியமாக வழங்கப்படும். பயனாளி பங்கு தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 15 குதிரை திறன் மோட்டாருக்கு மொத்த தொகையான ரூ.4 லட்சத்தில், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பயனாளி பங்கு தொகையாக ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் விவசாயிகள், குறிப்பிட்ட தொகையை ஒருமுறை செலுத்தி விரைவான முன்னுரிமை அடிப்படையில் இணைப்புப் பெறுவதற்காகவே தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் பட்டியல் இன விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகள் தருகிறது.
தமிழக அரசின் பட்ஜெட்டின் போது, ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு 90 சதவீத மானியத்துடன் கூடிய தட்கல் மின் இணைப்பு வழங்கும் வகையில் வளமிகு வேளாண்மை உதவி திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதி, உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்தி பொருளாதார மேம்பாடு அடைவார்கள் என அரசு அறிவித்திருந்தது. விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அந்த நிலத்தில் கிணறு அல்லது ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் விண்ணப்பம் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பின்பு, 10 சதவீத பங்குத்தொகையை தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு மோட்டார் குதிரை திறனுக்கு ஏற்ப பயணி செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 குதிரை திறன் மோட்டாருக்கு மொத்த தொகையான ரூ.2½ லட்சத்தில், ரூ.2¼ லட்சம் மானியமாக வழங்கப்படும். பயனாளி பங்கு தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 15 குதிரை திறன் மோட்டாருக்கு மொத்த தொகையான ரூ.4 லட்சத்தில், ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பயனாளி பங்கு தொகையாக ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும். தகுதியான ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.வருமான வரம்பு
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.26 கோடியே 9 லட்சத்தை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட விவசாயிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
பட்டினப்பாக்கம் கைவிடப்படுகிறதா? தலைமைச் செயலகம், சட்டசபைக்கு பல்லவன் இல்லத்தைப் பரிசீலிக்கும் விஜய்
விண்ணப்பிக்க தகுதி என்ன
சென்னை–திருச்சி இடையே 130 கிமீ வேகத்தில் ஓடப்போகும் ரயில்கள்..தெற்கு ரயில்வே போட்ட மாஸ்டர் பிளான்
மானியம் எவ்வளவு?