தட்கல் டிக்கெட்.. பல ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு.. ரயில் நிலையங்களில் ஆகஸ்ட் 1 முதல் அறிய வேண்டியவை

  • சென்னை: ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா.. நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை சந்தித்து வருகிறார்களா? உங்களுக்காகவே பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனைக்கு ரயில்வே தீர்வு கண்டுள்ளது. அதன்படியே ரயில் நிலைய கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கான புதிய நடைமுறை வருகிறது. வருகிற ஆகஸ்ட் 1 முதல் டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை அறிமுகம் ஆகிறது. எனவே ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் அறிய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

    Advertisement

    இந்தியாவில் சாமானிய மக்கள் குடும்பத்துடன் குறைவான கட்டணத்தில் பயணிக்க வேண்டும் என்றால் ரயிலில் தான் பயணிக்க வேண்டும். நீண்ட தூரம் குறைவான கட்டணத்தில், படுக்கை வசதி பெட்டி அல்லது அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால், முன்பதிவு செய்ய வேண்டும். படித்தவர்கள் பலர் ஐ.ஆர்.சி.டி.சி அல்லது 'ரயில் ஒன்' ஆகிய செயலிகள் மூலமாக முன்பதிவு செய்கிறார்கள்.

    Advertisement

    ஆனால் ஏழைகள், சாமானிய மக்கள்,போதிய படிப்பறிவு இல்லாத பாமர மக்களால் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதனால் அவர்கள் ரயில் நிலையத்தில் போய் தான் முன்பதிவு செய்கிறார்கள். அதேபோல் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யவும் பல ஏழை எளிய மக்கள் ரயில் நிலையங்களை நாடுகிறார்கள். ஆனால் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் டிக்கெட் புக் செய்ய நீண்ட நேரத்திற்குக் காத்திருப்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது. வெறும் ஐந்து நிமிடத்தில் தட்கல் டிக்கெட் முடிந்துவிடும் என்பதால், பலரும் நீண்ட வரிசையில் காத்திருப்பது அதிகமாக நடக்கிறது. இந்த சூழலில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    Advertisement

    அதன் படி, ஏ.சி தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை ரயில் நிலையங்களில் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் ரயில் நிலையங்களில் ஏ.சி அல்லாத தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கன் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை வழங்கப்பட இருக்கிறது
    இந்த நேரத்தில் மட்டும் வந்து தட்கல் டிக்கெட் புக்கிங்கிற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த டோக்கனைப் பெற்றவர்கள் தட்கல் டிக்கெட் புக்கிங் நேரத்தில் வரிசையில் நிற்காமல் நேரடியாக டிக்கெட் புக்கிங்கிற்கு போகலாம்.

    முதலில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ள ஒவ்வொரு முன்பதிவு மையத்திலும் ஏ.சி தட்கலுக்கு 10 டோக்கன்களும், ஏ.சி அல்லாத தட்கலுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்பட இருக்கிறது. பின்னர் பயணிகளின் தேவை மற்றும் ரயில் நிலையத்தின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதேபோல் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் புக் செய்த பிறகும் டிக்கெட்டுகள் இருந்தால், வரிசையில் நிற்பர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த டோக்கன் அடிப்படையிலான தட்கல் டிக்கெட் புக்கிங்கிலேயே இரண்டு வகைகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது A மற்றும் B. A வகை குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும். இதில் தங்களது புகைப்பட அடையாள அட்டையும், குடும்ப உறுப்பினரின் அடையாள அட்டையும் சமர்ப்பித்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

    B வகையில் தனிநபர்கள், குடும்பம் அல்லாத குழுக்கள், பொதுப் பணிகள் ஆகியவற்றுக்கு டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. டோக்கன் பெற்ற பிறகு இந்த வகைகளை மாற்ற முடியாது என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதேநேரம் ஆன்லைன் தட்கல் டிக்கெட் புக்கிங்கில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடைசி நேரத்தில் கூட்டநெரிசலை தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தவும் இந்த முறை அறிமுகப்படுத்தி உள்ளது ரயில்வே. இந்த நடைமுறை முதலில் மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில் நிலையங்களில் மட்டும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பிற கோட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

    English Summary

    Are you planning to book a Tatkal ticket at the railway station? Do you face the hassle of waiting in long queues? The Railways has found a solution to this long-standing problem. Accordingly, a new procedure for booking Tatkal tickets at station counters will come into effect on August 1st.