TCS லேப்டாப்களில் கண்காணிப்பு சாப்ட்வேர்! நாடு முழுக்க ஊழியர்கள் அதிர்ச்சி! பின்னணி என்ன?

  • சென்னை: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் Digital User Experience Monitoring கருவியை நிறுவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது ஊழியர்களிடையே தனியுரிமை மற்றும் தனிநபர் கண்காணிப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சாப்ட்வேர் என்ன செய்கிறது?

    நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லேப்டாப்களில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய மென்பொருள், ஊழியர்கள் எந்தெந்த செயலிகளை பயன்படுத்துகிறார்கள் மற்றும் ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை பதிவு செய்யும் திறன் கொண்டது. இதன் மூலம் கணினியின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் பயன்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும்.

    சைபர் பாதுகாப்பு காரணங்கள்

    உலகளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி வாடிக்கையாளர்களின் முக்கியத் தரவுகளை டிசிஎஸ் கையாள்கிறது. இதனால், நிறுவனத்தின் தரவு கசிவுகளைத் தடுப்பது. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் வேகம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துவது. அங்கீகரிக்கப்படாத மென்பொருள்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உடனுக்குடன் கண்டறிவது, போன்ற முக்கிய தேவைகளுக்காக இந்த சாப்ட்வேர் பயன்படுத்தபடுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஊழியர்களின் முக்கிய அச்சம்

    அதே வேளையில், இந்த மென்பொருள் ஊழியர்களின் தனிப்பட்ட வேலைத்திறன் மற்றும் செயல்பாடுகளை நுணுக்கமாகக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ஊழியர்கள் லேப்டாப்பில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்யப்படுவது அவர்களது Appraisal மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    டிசிஎஸ் விளக்கம்

    இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஊழியர்களை தனிப்பட்ட முறையில் உளவு பார்ப்பதாக வெளியான செய்திகளை டிசிஎஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், நாங்கள் ஊழியர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை லேப்டாப் வழியாகக் கண்காணிப்பதில்லை.. ஊழியர்களின் தனியுரிமையை எப்போதும் மதிக்கிறோம். நெட்வொர்க்கின் பொதுவான செயல்பாடு, சைபர் பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் டிஜிட்டல் பயன்பாட்டு அனுபவத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே மேக்ரோ அளவிலான தரவுகள் கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

    Advertisement

    பல்வேறு சந்தேங்கங்கள்

    நிறுவனம் மறுப்பு தெரிவித்தாலும், சில அடிப்படை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. பயன்படுத்தப்படும் கண்காணிப்பு மென்பொருளின் பெயர் மற்றும் அதை தயாரித்த நிறுவனம் பற்றிய விவரம், ஊழியர்களின் எந்தெந்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன, அவை எவ்வளவு காலம் சர்வரில் சேமிக்கப்படும் என்பது.

    இந்தத் தரவுகளை நிறுவனத்தின் ஐடி குழு மட்டுமே பார்க்க முடியுமா அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் மேனேஜர்கள் பார்க்க முடியுமா? தரவுகள் தனிநபர் வாரியாகப் பிரிக்கப்படுகிறதா அல்லது ஒட்டுமொத்த டீம் டேட்டாவாக மட்டும் பயன்படுத்தப்படுகிறதா என்று பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

    Advertisement

    6 லட்சம் பணியாளர்கள்

    டிசிஎஸ் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 6 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பணியாளர்களின் கணினி செயல்பாட்டுத் தரவுகளை தினசரி சேகரித்து நிர்வகிப்பதே மிகப்பெரிய தொழில்நுட்ப சவாலாகும். அப்படிப்பட்ட சூழலில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஊழியர்களை டிசிஎஸ் கண்காணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில் ஊழியர்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து வெளிப்படையான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த விவகாரத்திற்கு சரியான தீர்வாக அமையும்.

    English Summary

    TCS Laptop Monitoring Tool: What Does It Track and Why Employees Are Worried?