ஓய்வூதியம் பெற தகுதிகாலம்... ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என எதிர்ப்பு

  • சென்னை: தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தகுதியான பணிக்காலம் 18 ஆண்டுகள் என அரசு விதிகள் வகுத்துள்ளதோ என அச்சப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் 18 ஆண்டு பணிக்காலம் குறைவானவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே ஓய்வூதியம் என தற்போது அரசு உத்தரவு வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் வஞ்சக செயல் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் ஓய்வூதியம் மாதம் 10,000 மட்டுமே வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    அக்கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்டரிக் ரெய்மாண்ட் இதுபற்றி கூறுகையில், "பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆண்டுகாலம் பணிக்காலம் முடித்திருந்தாலே ஓய்வூதியத்திற்கு தகுதியானவர் என்கிற நிலை இருந்தது. தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரியில் திமுக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ்வரும் அனைவருக்கும் 50 சதவீத ஓய்வூதியம் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், இப்போது தகுதியான பணிக்காலம் 18 ஆண்டுகள் என அரசு விதிகள் வகுத்துள்ளதோ என அச்சப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் 18 ஆண்டு பணிக்காலம் குறைவானவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே ஓய்வூதியம் என தற்போது அரசு உத்தரவு வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் வஞ்சக செயல் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கருதுகிறது.

    Advertisement

    ஏற்கனவே ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பை கட்டாயம் எனக் கூறி, லட்சக்கணக்கில் ஊதியத்தையும் கையில் வைத்துக் கொண்டு, ரூ.10 ஆயிரம் என சொற்ப தொகையினை ஓய்வூதியமாக அறிவித்திருப்பது அவர்களது எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்கும் வஞ்சக செயலாகும்.

    அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சவப்பெட்டி தயாரிக்கும் தமிழக அரசின் இந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

    தமிழக அரசின் அறிவிப்பு என்ன

    10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10 ஆயிரம் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும்.

    Advertisement

    டாப்ஸ் விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் உண்மையான அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்பட்டு, அதில் வரும் வித்தியாசம், நிலுவைத் தொகையாக வழங்கப்படும். 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் என்பதில், எது அதிகமோ அந்தத் தொகையுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் சேர்த்து இடைக்காலத் தொகையாக தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்காலத் தொகை அனுமதிக்கப்பட்டிருந்தால், அது வரம்பிற்கு உட்படுத்தப்படும். மேலும், அகவிலைப்படி உள்பட வழங்கப்பட்ட அதிகப்படியான தொகை, இந்த மாதம் முதல் இடைக்காலத் தொகை அல்லது இடைக்கால குடும்பத் தொகையிலிருந்து 10 சம தவணைகளில் திரும்பப் பெறப்படும்

    English Summary

    There are concerns that government rules may have set the qualifying service period at 18 years under the Tamil Nadu Assured Pension Scheme ( tps ). The Tamil Nadu Graduate Teachers Federation has opposed this, terming it a deceitful act that strikes a blow at the livelihood of teachers and government employees.