சென்னை: டெண்டர் கால அவகாசத்தைக் குறைத்த 3 நகராட்சி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு புதிய டெண்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மிகக் குறைவான கால அவகாசத்துடன் டெண்டர்கள் வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
Advertisement
இந்நிலையில், விதிகளை மீறி டெண்டர் கால அவகாசத்தைக் குறைத்த செங்கம், கோத்தகிரி, உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்கள் மீது நடவைக்கை தொடங்கப்பட்டுள்ளது. டெண்டர்களுக்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதால், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், பிரிவு 17பி-ன்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.