தகைசால் தமிழர் விருதை மறுத்த ராமதாஸ்.. பாமக குடும்பத்திலேயே டிக் அடித்த தவெக.. என்ன நடந்தது?

  • சென்னை: தமிழக அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதலில் பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு தகைசால் தமிழர் விருதை வழங்கவே தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் தவெகவின் திட்டம் அறிந்து, ராமதாஸ் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    நாட்டின் 80வது சுதந்திர தினம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதன்பின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழக அரசின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.

    Advertisement

    பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. இதனால் தனது தந்தை தகைசால் தமிழர் விருது வாங்குவதை செளமியா அன்புமணி துள்ளிக் குதித்து கொண்டாடினார். இருப்பினும் தகைசால் தமிழர் விருது கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் தகைசால் தமிழர் விருதுக்கு முதலில் டிக் அடிக்கப்பட்ட பெயர் வேறு.

    அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு தகைசால் விருதினை வழங்க தமிழக அரசு அணுகி இருக்கிறது. ஆனால் தவெகவின் சூட்சமங்களை அறிந்து தகைசால் விருது வேண்டாம் என்று ராமதாஸ் திட்டவட்டமாக கூறி இருக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி மூலமாக அன்புமணியிடம் பேசப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஆனால் அன்புமணியும், ராமதாஸை அலைக்கழிக்க வேண்டாம்.. அவரை சமாதானம் செய்வது இயலாத விஷயம் என்று கைவிரித்திருக்கிறார். இதன் பின்னரே செளமியா அன்புமணி மூலமாக கிருஷ்ணசாமி அணுகப்பட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதன் மூலமாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் தவெக தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அன்புமணி இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கவில்லை. விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் மீது விஜய்க்கு இன்னும் முழுமையாக நம்பிக்கை வரவில்லை என்றால், பாமக உடன் தவெக நெருக்கமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    English Summary

    Ramadoss: Thagaisal Thamizhar Award Presented to Former Congress Chief Krishnaswamy After PMK Founder Ramadoss declines