தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: நேற்று ஒரே நாளில் எத்தனை குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது?

  • சென்னை: மதுரையில் முதல்வர் விஜய் நேற்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 3,297 மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    Advertisement

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை அறிவித்தது. தவெக ஆட்சியமைத்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளானா கடந்த 22.6.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தது. அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    Advertisement

    விஜய் தொடங்கி வைத்தார்

    மேலும் இதற்காக இந்த ஆண்டுக்கு மட்டும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 1.28 லட்சம் தங்கம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. குழந்தைகளுக்கு தங்கம் மோதிடம் வழங்கும் விதமாக தமிழகம் முழுவதும் 107 மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    இந்நிலையில் முதல்வர் விஜய் நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த சிறப்பு விழாவில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு 30 குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுக்க உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

    Advertisement

    நேற்று ஒரே நாளில்..

    அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுக்க 3,297 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அரசு மருத்துமனைகளில் பிறந்த 3,297 குழந்தைகளுக்குத் தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் தங்கம் மோதிரங்கள் வழங்கப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு, தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள 22 கேரட் தரம் உள்ள பிஐஎஸ் முத்திரை உள்ள தங்கம் மோதிரம் தமிழக அரசின் சீராக வழங்கப்படும்.

    Advertisement

    இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுமா?

    தாயின் முதல் குழந்தைக்கு மட்டும் தான் வழங்கப்படும். இரண்டாவது குழந்தைக்கு வழங்கப்படாது என்றெல்லாம் இல்லை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் தான், அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் PICME மற்றும் RCH-ID ஆகியவற்றைப் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கடந்த ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு, 107 மையங்கள் மூலம் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண், பாதுகாப்பு முத்திரை இட்ட சிற்பம், தாயின் ஆர்சிஎச் அடையாள பதிவு இருக்கும்.

    English Summary

    Thaimaman Thanga Mothiram Scheme: Chief Minister Vijay launched the 'Thai Maman Thanga Mothiram' (Maternal Uncle's Gold Ring) scheme in Madurai yesterday. Under this scheme, a one-gram gold ring is presented to babies born in government hospitals. The Department of Public Health reported that 3,297 rings were distributed in a single day yesterday, covering babies born since June 22.