இன்னும் கொஞ்ச நாள் தான்.. ஜனநாயகன் சென்சார் வந்த மாஸ் அப்டேட்.. விஜய் பட ரிலீஸ் தேதி இதுதானாம்!

  • சென்னை: தமிழக புதிய முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கோட்டையில் அரியணை ஏறியுள்ள அரசியல் பரபரப்புக்கு மத்தியில், அவரது கடைசிப் படமான "ஜனநாயகன்" எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து கொண்டே தான் இருக்கிறது. சென்சார் பிரச்சனை தொடரும் சூழலில், இப்போது ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளங்கள் ரசிகர்களுக்கு ஒரு மெகா அப்டேட் கொடுத்துள்ளன.

    Advertisement

    விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி இருந்த ஜனநாயகன் கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருக்க வேண்டியது. இருப்பினும், சென்சார் பிரச்சினையால் சொன்ன நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை. நீதிமன்ற வழக்கு, ரிவைசிங் கமிட்டி என்று குழப்பம் தொடர்ந்த நிலையில் படம் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இதற்கு நடுவே தேர்தல் நடந்து விஜய் முதல்வராகவும் ஆகிவிட்டார்.

    Advertisement

    ஜனநாயகன் குழப்பம்

    ஆனால், 'ஜனநாயகன்' எப்போது ரிலீஸ் ஆகும் என்பதில் குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதிக்காகத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் விஜய் தரப்பிலிருந்து ரசிகர்கள் தவம் கிடக்கும் வேளையில், முன்னணி டிக்கெட் புக்கிங் இணையதளங்கள் தங்களது காலண்டரைப் புதுப்பித்துள்ளன. அதில் தான் ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு அப்டேட் வந்துள்ளது.

    எப்போது ரிலீஸ்?

    பிரபல டிக்கெட் புக்கிங் தளமான டிஸ்ட்ரிக்ட், இந்தப் படத்தின் உத்தேச ரிலீஸ் தேதியை 'ஜூன் 19' என்று அப்டேட் செய்துள்ளது. அதேபோல மற்றொரு முன்னணித் தளமான புக்மைஷோவும், ஜனநாயகன் திரைப்படம் ஜூன் மாதமே திரைக்கு வரும் என்பது போல தங்களது காலண்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கோயில் ஒன்றிற்குத் தரிசனத்திற்காக வந்திருந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணாவிடம் செய்தியாளர்கள் 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்துக் கேள்வி எழுப்பினர். தொடக்கத்தில் பேசத் தயங்கியவர், பின்னர் படத்தின் தற்போதைய நிலவரம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    தயாரிப்பாளர் சொன்ன தகவல்

    அப்போது அவர், "இது ஜனநாயகன் படம் பற்றிப் பேசுவதற்கான இடம் அல்ல, நான் இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறத் தரிசனத்திற்காக வந்துள்ளேன். இருந்தாலும் உங்களது கேள்விக்காகச் சொல்கிறேன், நாங்கள் சென்சார் சான்றிதழுக்காகக் காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. விதிகளின்படி சென்சார் சான்றிதழ் எங்கள் கைகளுக்கு வந்தவுடனேயே, புதிய ரிலீஸ் தேதியை முறைப்படி அறிவிப்போம். வெறும் அறிவிப்போடு நிற்காமல், உலகமெங்கும் மிக பிரம்மாண்டமான முறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்!" என்றார்.

    Advertisement

    ஜனநாயகன்

    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகியுள்ள ஜனநாயகன் ஒரு பக்கா அரசியல் ஆக்ஷன் டிராமா திரைப்படமாகும். அநீதிக்கு எதிராகப் போராடி, காலப்போக்கில் மக்களின் குரலாக மாறி ஒரு மாபெரும் தலைவனாக உருவெடுக்கும் ஒரு சாமானிய மனிதனின் கதை போல இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

    விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி என ஒரு மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். விஜய் முதல்வராகிவிட்ட நிலையில், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட் நிலவுகிறது.

    English Summary

    Following TVK chief Vijay assuming office as Chief Minister, ticketing platforms BookMyShow and District updated the tentative release window(விஜய் ஜனநாயகன் ரிலீஸ் தேதி): Vijay Last Movie Jana Nayagan Release Date latest news in tamil.