தமிழகத்தில் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு.. நிர்வாக கோளாரின் அடையாளம்.. தங்கம் தென்னரசு

  • சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் நாட்டின் பிற மாநிலங்களை விஞ்சி, இரட்டை இலக்க வளர்ச்சியோடு ஜி.எஸ்.டி வசூலில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் நிதி நிலைமை, இன்று தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து, -5% வரை சரிவைச் சந்தித்திருப்பது வேதனையளிக்கிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

    Advertisement

    தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் பிற மாநிலங்கள் தொடர் தொழில் வளர்ச்சியைக் காணும்போது, தமிழ்நாட்டில் மட்டும் உற்பத்தி முடங்கி, நுகர்வு சுருங்கி வருவது நிர்வாகக் கோளாறின் வெளிப்படையான அடையாளம். தொழில் முதலீடுகளையும் நிதி மேலாண்மையையும் தொலைநோக்குப் பார்வையோடு கையாண்ட திராவிட மாடல் ஆட்சியின் வழிகாட்டுதல் இன்றி, பொருளாதாரத்தை முடக்கியுள்ள இந்த சீர்கேட்டிற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.2.03 லட்சம் கோடியாகும். இதில், உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலமான வருவாய் 10.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1.38 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது. இறக்குமதி மீதான வருவாய் 26 சதவீதம் உயா்ந்து, ரூ.65,525 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. தேசிய அளவில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் வசூல் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 3வது மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1 சதவீதம் அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்து இருந்தது. இது செப்டம்பர் மாதத்தில் ஐந்து சதவீதம் என்கிற அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ரூ.10,670 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது. ஆனால் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.10,188 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதன் மூலம் ஓராண்டு ஒப்பீட்டில் ஜிஎஸ்டி வருவாய் சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளம் மாநிலத்தின் ஜிஎஸ்டி வசூல் ரூ.3010 கோடியில் இருந்து ரூ.3238 கோடியாக உயர்ந்துள்ளது. இது 11% அதிகமாகும். கர்நாடகாவில் ஜிஎஸ்டி வசூல் ரூ.12,001 கோடியில் இருந்து ரூ.13,884 கோடியாக 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆந்திரா ஜிஎஸ்டி வசூல் 6% வரை உயர்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஜிஎஸ்டி 18% வரை உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஜிஎஸ்டி வசூல் 15%க்கு மேல் அதிகரித்துள்ளது.

    English Summary

    Former DMK Minister Thangam Thennarasu has expressed concern that Tamil Nadu's financial situation—which had previously surpassed other states and achieved record-breaking GST collections with double-digit growth during the DMK's tenure—has now seen a decline for three consecutive months, dropping by as much as 5%.