அடுத்தக்கட்ட திட்டம் இல்லாத எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்.. எடப்பாடி பக்கம் சென்ற தங்கமணி.. பின்னணி?

  • சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடுத்தக்கட்ட திட்டங்கள் எதுவும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பிடம் இல்லை என்பதால், அவரின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கமணி திடீரென எடப்பாடி பழனிசாமியை அமைதிபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

    Advertisement

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தொடர்ந்து மோதல் போக்கில் இருந்து வருகின்றனர். தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்வதாக இல்லை.

    Advertisement

    இதனால் சட்டசபையில் கூட எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு தனி அணியாகவே செயல்பட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் திடீரென எஸ்பி வேலுமணி அணியில் இருந்த தங்கமணி, எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி இருக்கிறார். இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு கொஞ்சம் ஆடி போயுள்ளது. ஆகஸ்ட் 14ல் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எஸ்பி வேலுமணி தங்கள் அணியினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார்.

    ஆனால் எஸ்பி வேலுமணி மட்டும் சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து தள்ளினார். இது எஸ்பி வேலுமணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கமணியின் இந்த மாற்றத்திற்கு பின்னணியில் அதிருப்தியே காரணமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க எஸ்பி வேலுமணி அணியிடம் அடுத்தக்கட்டமாக எந்த திட்டமும் இல்லை.

    Advertisement

    அதற்கேற்ற பொருளாதார வலிமையை இல்லை என்பது தங்கமணி உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் எஸ்பி வேலுமணியை விடவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் நெருக்கமாக இருப்பவர் தங்கமணி. மின்துறை அமைச்சராக இருந்த நெருக்கம், தற்போதும் தொடர்ந்து வருகிறது.

    இதனால் எடப்பாடி பழனிசாமிக்கே இன்னும் பாஜக ஆதரவு அளிப்பதாக தெரிய வந்திருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் தங்கமணியிடம் கூறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே எஸ்பி வேலுமணி அணியில் இருந்து விரைவாக எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்திருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    Thangamani: Thangamani Steps In to Pacify Edappadi Palaniswami as Opposing AIADMK Factions Lack Further Strategy