சென்னை: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆளும் என்.ஆர். காங்கிரஸின் வேட்பாளர் அசோக் ஆனந்தன் தற்போது வெற்றி பெற்றிருக்கும் நிலையில், திமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. நோட்டாவுக்கு 225 வாக்குகள் பதிவான நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் குமாரி வெறும் 121 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திருச்சி கிழக்கும், பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்தார்.
இதேபோல புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி தொகுதியில் வெற்றி பெற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் போட்டியில் என்ஆர் காங்கிரஸின் அசோக் ஆனந்த், காங்கிரஸின் விநாயகம், திமுகவின் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சலீம், நாம் தமிழர் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் மொத்தம் 21,756 பேர் வாக்களித்தனர். அதாவது 10,56 ஆண் வாக்காளர்கள், 11,695 பெண் வாக்காளர்கள், 5 மூன்றாம் மாநிலத்தவர்கள் என 80.81% வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் 87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த தேர்தலை விட சுமார் 6 சதவீத வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இடைத்தேர்தலின் போது பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் 4 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் 3 சுற்றுகளில் 8 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகளும், 4வது சுற்றில் 2 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. பரபரப்பாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்தே என்ஆர் காங்கிரஸின் அசோக் ஆனந்த் முன்னிலை பெற்றார். மொத்தம் பதிவான 21,756 வாக்குகளில் 13,293 வாக்குகள் பெற்று அதாவது பதிவான வாக்குகளில் பாதிக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4850 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுகவின் சேது செல்வம் 2656 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சலீம் 310 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கார்த்திக்குமாரி 171 வாக்குகளும் பெற்றனர். இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரஸ் தவிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட்டி இழந்தனர். குறிப்பாக தட்டஞ்சாவடி தொகுதியில் யாருக்கும் வாக்களிக்கவில்லை என குறிப்பிடப்படும் நோட்டாவுக்கு 225 வாக்குகள் பதிவான நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் குமாரி வெறும் 121 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார்.உலக முட்டை தினம் இன்று.. எங்க ஓட்டை எப்போ சார் எண்ணுவீங்க? காத்துக் கிடக்கும் நாம் தமிழர் தம்பிகள்!
எடைத் தேர்தலான இடைத் தேர்தல்! தபால் வாக்கு முதல் EVM வரை..வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும் தெரியுமா?
மதுராந்தகம், தாராபுரம் ரிசல்ட்.. தவெக வென்றால் என்ன ஆகும்? திமுக வென்றால் என்ன ஆகும்? முழு கணக்கு