யூடியூபர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டம்.. சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சனம்

  • சென்னை: பத்திரிகையளார் முக்தார் அகமது மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றாலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாக கருதுகிறோம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் விமர்சித்துள்ளது.

    Advertisement

    பாஜக மாநில விளை​யாட்​டு, திறன் மேம்​பாட்​டுப் பிரிவு செயலாளராக இருப்​பர் அலிஷா அப்​துல்​லா. இவர் சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் சமீபத்​தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், 'எனக்​குப் பிறந்த இரட்​டைக் குழந்​தைகளை பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை​யுடன் தொடர்புபடுத்தி யூடியூபர் முக்​தார் அகமது, பாஜக முன்​னாள் பிரமுகர் திருச்சி சூர்யா ஆகியோர் இழி​வான கருத்​துகளு​டன் வீடியோ வெளி​யிட்​டுள்​ளனர். அவர்​கள் இரு​வரை​யும் கைது செய்து சிறை​யில் அடைக்க வேண்​டும்' என்று கூறி​யிருந்​தார்.

    Advertisement

    இதையடுத்​து, சென்னை காவல் ஆணை​யரின் உத்​தர​வின்​பேரில், சென்னை மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இதில், அலிஷா அப்​துல்லா புகாரில் தெரிவித்​திருந்​தது உண்மை என தெரிய​வந்​தது. இதையடுத்​து, திருச்சி சூர்யா, யூடியூபர் முக்​தாரை கைது செய்ய தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன.

    திருச்​சி​யில் சூர்​யாவை (33) தனிப்​படை​யினர் கடந்த 4-ம் தேதி கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். தலைமறை​வான யூடியூப​ரான வேலூர் சத்​து​வாச்சாரியைச் சேர்ந்த முக்​தார் அகமதுவை (48) தீவிரமாக தேடி வந்​தனர். இந்​நிலை​யில், கர்​நாடக மாநிலம் மண்​டி​யா​வில் முக்​தார் அகமதுவை தனிப்​படை​யினர் கடந்த வாரம் கைது செய்து சென்​னைக்கு அழைத்து வந்​தனர். இவர் மீது ஏற்​கெனவே 2 வழக்கு​கள் நிலு​வை​யில் இருந்தது.

    Advertisement

    சமூக வலை​தளங்​களில் அவதூறாக பேசி வரு​வது தொடர்​பாக இவர் மீது 20-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் பெறப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வந்தது. இந்த சூழலில் முக்தார் மற்றும் சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "பல முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய பத்திரிகையாளர் முக்தார் அகமது தற்போது யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலில் பாஜக நிர்வாகி திருமதி. அலிஷா அப்துல்லா குறித்து மோசமாக பேசியது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

    Advertisement

    முக்தார் அகமது நேர்காணல் செய்யும் விதம், அவர் கேட்கும் கேள்விகள், ஒரு நபரின் அந்தரங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பது, பெண்கள் குறித்து அவர் வெளியிடும் கருத்து ஆகியவற்றால் சர்சைக்குரிய நபராகவே பார்க்கப்படுகிறார். மேற்குறிப்பிட்ட விஷயங்களில் சென்னை பத்திரிகையளார் மன்றத்திற்கும் அவர் மீது கடுமையான விமர்சனம் உள்ளது. சமீபத்தில், அலிஷா அப்துல்லா குறித்து அவர் வெளியிட்ட நேர்காணலில் கூறப்பட்ட கருத்துகள் நிச்சயம் யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் அதீத நடவடிக்கையாகும். அத்துடன், இந்த நடவடிக்கை மறைமுகமாக அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.

    Advertisement

    ஆகவே, பத்திரிகையாளர் முக்தார் அகமது மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. குண்டர் சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Chennai Press Club strongly condemns the booking of YouTuber Mukthar Ahmed under the Goondas Act.