சென்னை: சென்னை ஈசிஆரில் கடற்கரை சொகுசு பங்களாக்களில் புதிய கலாச்சாரம் உருவாகி உள்ளது. யார் என்றேதெரியாத 30 ஆண்கள், பெண்கள், ஒன்று சேர்ந்து மீட் அப் என்றபெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். அந்த நிகழ்ச்சியில், யாருடனுன் வேண்டுமானாலும் ஜாலியாக நடனமாடலாம், எவ்வளவு வேண்டுமானாலும் மது அருந்தாலும், சாப்பிடலாம், மறுபடியும் ரீப்பீட் என்பது போல் டிஜே பார்டியுடன் ராஜ விருந்து நடைபெறுகிறது. இதற்கு குறைந்த அளவிலேயே முன்பதிவு செய்கிறார்கள். முன்பதிவு செய்து பணம் கட்டியவர்களை மட்டும் அனுமதித்து இப்படி மதுவுடன் கூடிய விருந்து நடத்துகிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போன்ற கலாச்சார நகரத்திற்கு இதுபோன்ற கலாச்சார சீரழிவு தேவையில்லை என்று நெட்டிசன்கள் கேப்சன் போட்டு வீடியோவை ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள். இதில் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் மது அருந்திய பின்னர், சுயநினைவை இழக்கும் பெண்கள், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் வாய்ப்பு அதிகம். அதாவது யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சூழலை உருவாக்கிவிடும்.
மது என்ற அரக்கன் போன பின்னர், நல்ல மனிதன் கூட மிருகமாகுவான், தவறுகள் சரி என்று தோன்றும். அவர்களை அறியாமல் தவறு செய்யவும் வாய்ப்பை உருவாக்கும். இதில் இளம் டீன் ஏஜ் பெண்கள், இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் பங்கேற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற பார்டிக்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. நெட்டிசன் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோ குறித்து கூறுகையில், "இது அவங்க பர்சனல்... அப்படின்னு கடந்து போகலாம்... அறிமுகம் இல்லாத இந்த கூட்டத்துல முதல்ல குழுவா போகும்போது ரொம்ப ஜாலியா இருக்கும்...இந்த குழுவில் ஒரே ஒரு பொறுக்கி இருந்தாலும்... உங்ககிட்ட காதலா பேசி, அடுத்த அடுத்த கட்டங்களுக்கு போய் வீடியோவா எடுத்து வச்சு மிரட்டி.... வாழ்க்கையே படுகுழியில தள்ளப்படலாம்... நல்ல அறிமுகமான நண்பர்கள் பார்ட்டிலேயே நிறைய பிரச்சனை நடக்குது. இப்ப கூட அமெரிக்காவில் நல்லா பழகின நன்கு தெரிந்த, ஓணம் பண்டிகை முடிஞ்ச பிறகு, ஒரு பொண்ணு ரெண்டு பேர நல்ல நண்பர்களை ஒருத்தவங்கள கார் ஏற்றியும், இன்னொருத்தவங்க கத்தியால குத்தியும் கொன்று இருக்காள்.. அறிமுகம் இல்லாத இந்த பார்ட்டி. முதல்ல சந்தோஷத்தை கொடுக்கும், பெரிய சுதந்திரத்தை அனுபவிச்சா மாதிரி ஒரு பில் கொடுக்கும். ஆனால் இது ஒரு மிகப்பெரிய டிராப்பாகவும் சில பேருக்கு அமையலாம். அதன் பிறகு அது நரக வேதனை வெளியே கூட சொல்ல முடியாது.. சொல்றது தான் சொல்ல முடியும்...." இவ்வாறு கூறியுள்ளார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில் , இது சட்டப்பூர்வமானதா? இதில் ஏதோ சந்தேகத்திற்குரியதாகவும், மறைமுகமானதாகவும் விஷயம் இருக்கிறது. சென்னை நகரக் காவல் சட்டத்தின் பிரிவு 34-ன் படி, 46.5 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட ஒரு மூடப்பட்ட கட்டிடத்தை, காவல் ஆணையரிடம் உரிமம் பெறாமல் "பொது பொழுதுபோக்கு அல்லது ஓய்வுக்கூடமாக" பயன்படுத்த முடியாது. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் அதை ஒருங்கிணைப்பாளர்கள் அதற்குரிய முறையான அனுமதிகள்/உரிமங்களைப் பெற வேண்டியிருக்கலாம். அதிகாரப்பூர்வ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் பட்டியல்களின்படி, உதாரணமாக FL-2 என்பது உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மது வழங்கும் லாப நோக்கற்ற கிளப்புகளுக்கானது; மற்றும் பல்வேறு ஹோட்டல் உரிமங்கள் மது அருந்துவதற்காக வழங்கப்படுகின்றன." இவ்வாறு கூறியுள்ளார்.