மியாவ் என்று கூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக.. தவெக ஐடி விங்க் விமர்சனம்

  • சென்னை: காவிரிப் பிரச்சனையில் ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்று தவெக ஐடி விங்க் கூறியுள்ளது.

    Advertisement

    தவெக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.

    Advertisement


    தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?

    அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.

    ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.

    Advertisement

    எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    எனவே, காவிரிப் பிரச்சனையில் ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    Advertisement


    ஸ்டாலின் எழுப்பிய கேள்வி

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.

    தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

    Advertisement

    ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.

    இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?" இவ்வாறு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.

    English Summary

    Regarding the Cauvery issue, Stalin should speak sincerely with the public interest in mind, rather than speaking out of spite over the fact that the DMK government has lost power and the TVK government has taken over. Can he do that? Deep down, his inner self would say no, driven by genuine spite. The TVK IT Wing has stated that this is a fact known not just to them, but to the entire world.