சென்னை: பாஜக கூட்டணியில் இணைந்து விஜய்க்கு பாடம் கற்பிக்கலாமா என்று திமுகவிற்குள் யோசிக்கப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய் அரசு எடுத்த கைது நடவடிக்கையை ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக கிச்சன் கேப்பிட்டால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். டெல்லியில் இருக்கும் திமுக எம்.பி.க்கள் டி. ஆர். பாலு உள்ளிட்ட சீனியர்கள் புதன் கிழமை (5-தேதி) இரவு ஸ்டாலினிடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
சாதாரண அவதூறு வழக்குப் போட வேண்டிய விஷயத்திற்கே கடுமையான பிரிவுகளின் கீழ் உதயநிதியை கைது செய்யுமளவுக்கு அந்த தம்பி (விஜய்) போகிறார் என்றால், இனி அடுத்த எல்லைக்கும் போவார். தவறு செய்தால் திமுக தலைமையின் குடும்பத்தையே நிலைகுலைய செய்ய முடியும் என இமேஜை கிரியேட் பண்ணுகிறார். இதனை அப்படியே விட்டுவிட்டால் திமுகவின் துணிச்சல், போராட்ட உணர்வு எல்லாம் ஒரு கட்டத்தில் சோர்ந்து விடும். அதனால், விஜய் அரசை எதிர்க்க வேண்டுமானால் பாஜக கூட்டணியில் நாம் இணைய வேண்டும். பாஜகவும் நம்மை எதிர்பார்க்கிறது. கூட்டணியில் இணைந்து கேபினெட்டில் நாம் இணைந்தால் தான் தவெக அரசிற்கு பாடம் புகட்ட முடியும் என்று வலியுறுத்தியுள்ளனர். சபரீசன், கிச்சன் கேபினெட் மற்றும் வழக்கறிஞர்களும் இதே கோணத்தில் சொல்லியுள்ளனர். இது குறித்து உதயநிதி, துரைமுருகன், நேரு, கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் ஸ்டாலின். அதேநேரம், நமக்கு இப்படி நெருக்கடி கொடுப்பதே, பாஜக பக்கம் தள்ளிவிடத்தான். அப்படி நடந்தால் திமுகவின் அடிப்படை வாக்கு வங்கிக்கே ஆபத்து. இதைத்தான் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்த விபரீத ஆட்டம் வேண்டாம் என்று சில எதிர்க்குரல்கள் கட்சியின் சீனியர் ஒருவரிடமிருந்து முன்வைக்கப்பட்டுள்ளதாம். எனவே இரு தரப்பு கருத்துக்களையும் ஆழமாக யோசித்து வருகிறது திமுக தலைமை என்கிறார்கள். - சிறப்பு நிருபர் எழில்