கள்ளக்காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல.. ஆனால் விவகாரத்து மட்டும் எளிதாக கிடைப்பது இல்லை.. ஏன்?

  • சென்னை: கள்ளக்காதலில் இருந்தால் தண்டனை இல்லை.. ஆனால் அதே கள்ளக்காதலை காரணம் காட்டி விவகாரத்து கோர முடியும். அதேநேரம் கணவன் மனைவி சேர்ந்த வாழ விரும்பவிட்டால், அவ்வளவு எளிதாக விவாகரத்து தருவது இல்லை..இது தான் நம் சட்டத்தில் உள்ள முரண்டுபாடு.. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஒருவரை வற்புறுத்துவது தவறு" என்ற எதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் நாட்டுச் சட்டத்தில் விசித்திரமான முரண்பாடுகள் உள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    இன்று ஒருபுறம், கணவனோ மனைவியோ திருமணத்தை மீறி வேறு ஒருவருடன் பழகினால் (கள்ளக்காதல்) அது ஜெயிலுக்குப் போகும் அளவுக்குக் "குற்றம் இல்லை" என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது. ஆனால் மறுபுறம், "எங்களுக்குள் ஒத்துவரவில்லை, நாங்கள் பிரிந்து விடுகிறோம்" என்று விவாகரத்து கேட்டுப் போனால், நீதிமன்றம் அவ்வளவு சீக்கிரம் அவர்களைப் பிரிந்து செல்ல அனுமதிப்பது இல்லை. இந்த முரண்பாடு ஏன் என்று பலருக்கும் கேள்விகள் இருக்கும். அதுபற்றி பார்ப்போம்.

    Advertisement

    கள்ளக்காதல் குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

    2018-ல் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, திருமணத்தை மீறிய உறவு என்பது குற்றவிய சட்டம் படி சிறைத்தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்று மாற்றப்பட்டது. ஒரு ஆண் யாரோடு பழகுகிறார், ஒரு பெண் யாரோடு பழகுகிறார் என்பது அவர்களின் சொந்த விஷயம் (தனிமனித சுதந்திரம்). அதற்குள் போலீஸும் சட்டமும் நுழைந்து தண்டித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நினைக்கிறது.

    பழைய சட்டத்தில் தவறு

    முந்தைய சட்டப்படி, ஒரு பெண் தப்பு செய்தால் அவளது கணவன் வழக்கு தொடரலாம்; ஆனால் கணவன் தப்பு செய்தால் மனைவியால் வழக்கு தொடர முடியாது என்ற சட்டம் இருந்தது. அதை ஒழிக்கவே இந்த மாற்றத்தை உச்ச நீதிமன்றம் கொண்டு வந்தது. ஆனால் பலரும் தவறாக புரிந்து கொண்டது போல, உச்ச நீதிமன்றம் கள்ளக்காதலை "நல்லது" என்று ஆதரிக்கவில்லை. "அது ஒரு ஒழுக்கக் குறைபாடு, அதற்காக ஒருவரைப் பிடித்து ஜெயிலில் அடைக்க முடியாது. இது கணவன்-மனைவிக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டிய அல்லது விவாகரத்து பெற வேண்டிய விஷயம்" என்று மட்டுமே கூறியுள்ளது.

    Advertisement

    விவகாரத்து வாங்கி பிரிய நினைப்பவர்களைச் சட்டம் ஏன் உடனே பிரிப்பதில்லை?

    விவகாரத்து வாங்கி பிரிய நினைப்பவர்களைச் சட்டம் ஏன் உடனே பிரிப்பதில்லை என்று பலருக்கும் கேள்விகள் உள்ளது. "நாங்கள் இருவருமே பேசித்தான் முடிவெடுத்தோம், எங்களை விவாகரத்து செய்துவிடுங்கள்" என்று தம்பதிகள் நீதிமன்றம் போனாலும் நீதிமன்றம் உடனே ஓகே சொல்வது இல்லை. அதேபோல பிடிக்காத மனைவி அல்லது பிடிக்காத கணவனை விவகாரத்து செய்ய நினைக்கும் போதும், உடனே நீதிமன்றம் விவகாரத்து தவறுவது இல்லை.

    நீதிமன்றத்தின் பார்வை என்ன

    திருமணம் என்பது வியாபார ஒப்பந்தம் கிடையாது. வெளிநாடுகளில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் போல். பிடிக்கவில்லை என்றால் எளிதாக உடைத்துவிடலாம். ஆனால், இந்தியாவில் குடும்பம் என்பதைச் சமூகத்தின் அஸ்திவாரமாக நீதிமன்றம் பார்க்கிறது. தற்காலிகக் கோபத்திலோ அல்லது சின்னச் சண்டையிலோ யாரும் அவசரப்பட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்று நீதிமன்றங்கள் நினைக்கின்றன. கணவனும் மனைவியும் பிரிந்தால் அங்கு அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களின் படிப்பு, எதிர்காலம், மனநிலை என்னவாகும்? குழந்தைகளுக்கு யார் பணம் தருவது? இதையெல்லாம் உறுதி செய்யத்தான் நீதிமன்றம் காலம் எடுத்துக்கொள்கிறது.

    Advertisement

    6 மாத கால அவகாசம்

    "கோர்ட்டு படியேறி வந்துட்டீங்க.. சரி, இன்னும் ஒரு 6 மாசம் பொறுமையாக யோசிச்சுப் பாருங்க.. உங்களுக்குள் கருத்துவேறுபாடுகளை யோசியுங்கள்" என்று நீதிமன்றம் நேரம் தரும். இந்த கேப்பில் எத்தனையோ குடும்பங்கள் மனம் மாறி ஒன்று சேர்ந்துள்ளன.. அதேபோல் சமரச முயற்சியாக கவுன்சிலிங் நடக்கும்.. அதிலும் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. இவை எதிலும் சேராதவர்கள் தான் பிரிந்து செல்கிறார்கள்.

    தாமதத்தால் நடக்கும் பக்கவிளைவுகள் என்ன

    விருப்பமே இல்லாத ஒரு நரக வாழ்க்கையை, ஒரே வீட்டுக்குள் வாழக் கட்டாயப்படுத்துவது ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் மனரீதியான வன்முறையாக பார்க்கப்டுகிறது. நீதிமன்றங்கள் விவாகரத்து தராமல் காலம் கடத்தும்போது, அந்த வெறுப்பான வாழ்க்கையைத் தாங்க முடியாமல் தான், பலர் திருமணத்தை மீறிய தவறான உறவுகளைத் தேடிப்போவது நடக்கிறது. இன்னும் சிலர் வீட்டில் வன்முறையில் ஈடுபடவோ அல்லது தற்கொலை, கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கவும் செய்கிறார்கள்.

    Advertisement

    இப்போது நல்ல மாற்றம்

    இந்த எதார்த்த நிலையை உணர்ந்த உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முற்போக்கான தீர்ப்பை வழங்கியது. "இனி இவர்களைச் சேர்த்து வைக்கவே முடியாது, அந்த அளவுக்குப் பந்தம் உடைந்துவிட்டது" என்று கோர்ட் உறுதியாக நம்பினால், அந்த 6 மாத கால அவகாசத்திற்கு எல்லாம் காத்திருக்கத் தேவையில்லை; உடனடியாக விவாகரத்து வழங்கிவிடலாம் என்று சட்டம் தளர்த்தப்பட்டிருக்கிறது.

    English Summary

    Indian law states adultery isn't a crime but allows it as grounds for divorce. Ironically, when a couple mutually wishes to separate without such issues, courts delay the process, creating a legal paradox.