ஊழலை எளிமைப்படுத்த அடுத்த திட்டமும் ரெடி .. நகராட்சி டெண்டர் குறித்து திமுக ஆதரவாளர் விளக்கம்

  • சென்னை: நகராட்சி டெண்டர் மாற்றம் குறித்து திமுக ஆதரவாளர் ஒருவர் அளித்துள்ள விளக்கத்தில் கண்டிஷன் நீக்கியது மூலம் யார் வேணும்னாலும் டெண்டர் எடுத்து இன்னொரு கம்பெனிகிட்ட சப் காண்டிராக்ட் கொடுத்து வேலையை முடிக்க முடியும். அதாவது ஏஜென்சி முறை. லெட்டர்பேடு கம்பெனிகள் இனி நிறைய உருவாகும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளாட்சி அமைப்புகள் இனிவரும் காலங்களில் டெண்டர்களின் போது "இடப் பார்வை சான்றிதழ்" (Site Visit Certificate) மற்றும் "இயந்திரச் சான்றிதழ்" (Machinery Certificate) ஆகியவற்றைக் கட்டாயமாகக் கோரக் கூடாது என்று அதிரடி உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    இந்த இரண்டு சான்றிதழ்களையும் வழங்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சில அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை மிரட்டி, கைமாறு மற்றும் லஞ்சம் வாங்குவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வதாக நீண்டகாலமாகப் புகார்கள் இருந்து வந்தன. இந்தச் சான்றிதழ்களை அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான, முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும், மற்றவர்களுக்கு மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.இதையடுத்தே விஜய் தலைமையிலான புதிய அரசு டெண்டர் விதிமுறையை மாற்றி உள்ளது.

    இதனை விசிக முன்னாள் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம் உருவாக்கிய சைட் விசிட், இயந்திரச் சான்றிதழ் முறையை நகராட்சித்துறையில் ஒழித்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் இதை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அத்துடன் ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் இணைப்பை பகிர்ந்து இருந்தார்.

    Advertisement

    இதுபற்றி விளக்கம் அளித்துள்ள திமுக ஆதரவாளர் சதீஷ்குமார் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "ஊழலை எளிமைப்படுத்த அடுத்த திட்டமும் ரெடி , ஒரு நிறுவனம் உண்மையிலேயே செயல்படுதா, அவர்களிடம் இந்த வேலைக்கு தேவைப்படும் மெஷின் எல்லாம் இருக்கான்னு உறுதி படுத்த தான் இந்த சோதனை. அப்படி இருந்தால் தான் பணியை கொடுக்கணும்.

    இப்போது இந்த கண்டிஷன் நீக்கியது மூலம் யார் வேணும்னாலும் டெண்டர் எடுத்து இன்னொரு கம்பெனி கிட்ட சப் காண்டிராக்ட் கொடுத்து வேலையை முடிக்க முடியும். அதாவது ஏஜென்சி முறை. லெட்டர்பேடு கம்பெனிகள் இனி நிறைய உருவாகும். கட்சியினரை / அமைச்சரை "சந்திச்சா" டெண்டர் வாங்கலாம் என்கிற முறை வசதியாக இருக்கும்.

    Advertisement

    இது நேரடியாக நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்காமல் தரகருக்கு டெண்டர் கொடுப்பது போல. அரசிடம் செல்வாக்கு உள்ளவர்கள் அவர்களுக்கு என்று நிறுவனமோ இடமோ மெஷினோ இல்லை என்றாலும் டெண்டர் வாங்கி அதை இன்னொரு கம்பெனிக்கு கொடுக்கலாம். இந்த ஏஜன்சிகள் இனி எல்லா நிறுவனங்களிடமும் SPoC ஆக செயல்பட வாய்ப்பு கேட்கும். நேரடி டெண்டர் முறை மாறி SPoC ஏஜென்சி முறை மூலம் டெண்டர் வாங்குவது எளிதாகும்.

    "யாரோ ஒருவர்" டெண்டர் எடுத்து இன்னொரு ஆளுக்கு கொடுத்து வேலையை முடிக்கலாம். அந்த "யாரோ ஒருவருக்கும்" அவருக்கு தெரிந்த அரசு அதிகாரி/அமைச்சர்/கட்சிக்காரர் ஆகியோருக்கு நல்ல விஷயம் தான்" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இதற்கு பதில் அளித்த இன்னொரு நெட்டிசன், "உங்களுடைய வழக்கமான சினிமாத்தனமான மிகைப்படுத்தல்களோடு, சில நியாயமான கேள்விகளையும் கலந்து நல்லா எழுதியிருக்க நண்பா.

    போலி நிறுவனங்களும், தரம் குறைந்த சப்-கான்ட்ராக்ட் வேலைகளும் கண்டிப்பா கவலைப்பட வேண்டிய விஷயங்கள்தான். ஆனா, புதுசா வர்றவங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துறதால, எல்லாமே தப்பாத்தான் நடக்கும்னு நீங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க. இந்த மாற்றத்தால, இதுக்கு முன்னாடி லஞ்சம் கொடுக்க முடியாம ஊழல் அதிகாரிகளால ஒதுக்கப்பட்ட நல்லவங்களும், தகுதியானவங்களும் உள்ளே வர வாய்ப்பிருக்குங்கிறதை நீ யோசிக்க மறந்துட்டீங்க.

    ஒன்னு இந்த ஊழல் அமைப்பை அப்படியே வச்சுக்கணும், இல்லன்னா போலி கம்பெனிகள் உள்ளே வந்து எல்லாரையும் ஏமாத்தப் போகுதுன்னு ரெண்டே ரெண்டு வழியை மட்டும்தான் நீ சொல்ற. ஆனா, இதுக்கு நடுவுல இன்னொரு நல்ல வழியும் இருக்கு. அதுதான் தகுதி சரிபார்ப்பை ஆன்லைன் (Digital) ஆக்குறதும், தணிக்கையை இன்னும் தீவிரப்படுத்துறதும் ஆகும்.

    Advertisement

    அரசாங்கம் எடுத்த ஒரு நிர்வாக முடிவை, ஏதோ பெரிய 'சதித் திட்டம்' மாதிரி காட்டாதீங்க. அது தப்பா இருக்கணும்னு அவசியம் இல்லை, ஆனா உன்னுடைய பார்வை முழுமையா இல்லை, அரைகுறையா இருக்கு.

    இந்த புது மாற்றத்திலும்கூட ஒரு முக்கியமான பிரச்சனைக்கு இன்னும் தீர்வு கிடைக்கல. அது, அதிகாரிகளோட தன்னிச்சையான பவர் . இப்போ குவாலிஃபிகேஷன் செக் பண்ணும்போதே லஞ்சம் வாங்குறவங்க, இனிமேல் வேலையை முடிச்சுட்டு செக் பண்ண வரும்போது லஞ்சம் வாங்க ஆரம்பிப்பாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்.

    இதை தடுக்க சில வழிகள்:

    கம்ப்யூட்டரே தேர்வு செய்யணும்: தணிக்கை செய்ய வேண்டிய இடங்களை அதிகாரிகளே முடிவு செய்யக் கூடாது. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலமா ரேண்டமா தானா தேர்ந்தெடுக்கணும்.

    அப்பப்போவே ஆன்லைனில் பதிவாகணும்: அளவுகளை எடுத்துட்டு அப்புறமாக எக்செல் ஷீட்ல டைப் பண்ற முறையை ஒழிக்கணும். இன்டர்நெட் வசதியுள்ள மெஷின் மூலமாக, அளவு எடுத்த அடுத்த செகண்டே அது எடுத்த நேரம், லொகேஷன் (GPS) எல்லாமே ஆட்டோமேட்டிக்கா ஆன்லைன்ல றிடணும். அதிகாரி வெறும் மெஷினை புடிச்சுகிட்டு நிக்கிறவரா மட்டும்தான் இருக்கணும், அவரால ரீடிங்கை மாத்தவே முடியாது.

    ரகசிய தணிக்கை: சோதனைக்காக எடுக்கப்படும் சாம்பிள்கள் எந்த ஊர்ல இருந்து, யார் கிட்ட இருந்து வருதுன்னு செக் பண்ற அதிகாரிக்குத் தெரியாத அளவுக்கு அதை ரகசியமா வச்சுக்கணும்.

    பொதுமக்கள் செக்கிங்: அரசாங்கத்தின் தணிக்கை விவரங்களை மக்கள் பார்க்குற மாதிரி ஒரு வெப்சைட் ஆரம்பிக்கணும். மக்கள் அதைப்பார்த்து, தப்பு நடந்தா புகார் செய்யுற வசதி இருக்கணும். மார்க்கெட்ல போட்டியை அதிகமாக்க அவங்க எடுத்திருக்கிற இந்த முதல் படி ரொம்ப முக்கியமானது" என்று கூறியுள்ளார்.

    English Summary

    A DMK supporter offers a clarification regarding the municipal tender: By removing the specific condition, anyone can now secure the tender and complete the work by sub-contracting it to another company. In other words, this amounts to an agency-based system. Consequently, a proliferation of "letterhead companies" is to be expected.