ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. நாளை முக்கியமான நாள்

  • சென்னை: பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

    Advertisement

    உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    Advertisement

    ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

    ஸ்வீட் பாக்ஸ்க்கு ஆசைப்பட்டு அட்ரஸை போட்ட மதுரை வீரமணி.. குவியும் ஆர்டர்.. வித்தியாசமான பழிவாங்கல்

    பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்கலாம். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (ஒ.டி.பி.) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் ரேஷன் அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட செல்போனுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement
    அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை நடைமுறையில் பெரிய தடை? இந்திய ஐடி ஊழியர்களுக்கு என்னவாகும்?

    ஏழைகளுக்கு ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச அரிசியும், மலிவு விலையில் கொடுக்கப்படும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவையும்தான் குடும்ப செலவுகளை பெருமளவில் குறைக்கும் . எனவே பலரும் ரேஷன்கார்டு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்றால் கேஸ் இணைப்பு வேண்டும். கேஸ் இணைப்பு இல்லாதவர்களால் ரேஷன் கார்டு வாங்க முடியாது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தினர் கேஸ் இணைப்பை பெற முயற்சிக்கிறார்கள்.ஆனால் சர்வதேச சூழல்கள் காரணமாக புதிய கேஸ் இணைப்பு கிடைப்பதில் சவால் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    English Summary

    A public grievance redressal camp for the Public Distribution System (PDS) will be held in Chennai tomorrow. Services related to the PDS—such as adding or removing names on ration cards, changing addresses, and registering or updating mobile numbers—will be provided at this camp.