டெல்லி: உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சந்தையில் சுழலும் பணத்தின் அளவைக் குறைத்து, வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவில் உள்ளன. அமெரிக்கா கூட அண்மையில் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இது ஒருபுறம் எனில், பல மாதங்களாக வங்கி அமைப்பில் அதிகப்படியான பணப்புழக்கம் இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களையும் கொண்டு, 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இரண்டு முறை, மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தலாம் என சொல்கிறார்கள். அப்படி உயர்த்தினால் தனிநபர் கடன், வீடுக்கடன், வாகன கடன், நகைக்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு வட்டி விகிதம் உயரும்.
சர்வதேச சந்தையில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாடுமே பணப்புழக்கத்தை குறைக்க முயற்சிக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் பெடரல் வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி, இந்தியாவில் ரிசர்வ் வங்கி போன்றவை பணப் புழக்கத்தைக் குறைக்க முயல்கின்றன.
பொதுவாக இந்தியாவின் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவின் பெடரல் வங்கி உள்பட உலக நாடுகளின்மத்திய வங்கிகள், நாட்டின் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை பொறுத்தே வட்டி விகிதத்தை தீர்மானிக்கின்றன. விலைவாசி உயரும் போது, அதாவது பணவீக்கம் அதிகரிக்கும் போது, மத்திய வங்கிகள் தங்கள் 'ரெப்போ விகிதத்தை உயர்த்தும். இதனால் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை அதிரிக்கும். சேமிப்புக்கான வட்டியையும் வங்கிகள் அதிகரிக்கும். அதேபோல் வங்கிகள் பொதுமக்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் வழங்கும் வீட்டுக்கடன், வாகன கடன், வணிக கடன்,கன்சியூமர் லோன் கடன் உள்பட பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கும். எனவே அதிக பணம் உள்ள மக்கள் வங்கியில் சேமிக்க விரும்புவார்கள். தேவையை குறைத்துக்கொள்வார்கள். அதேபோல் அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்யணுமா என்று நினைத்து மக்களுமே கடன் வாங்கி செலவு செய்வதை குறைத்துக் கொள்வார்கள். அவர்களின் கையில் பணப்புழக்கம் குறைந்துவிடும். இதனால் தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படும். ஒரு கட்டத்தில், சந்தையில் பொருட்களுக்கான தேவை குறைந்து விலைவாசி குறையும். இதனால் பணவீக்கம் அரசு எதிர்பார்த்தது போல் கட்டுக்குள் வரும். ஆனால் ரிசர்வ் வங்கி கடைசியாக வட்டி விகிதத்தை எப்போது உயர்த்தியது என்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை. கடைசியாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) 2023ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி உயர்த்தியது. அப்போது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) உயர்த்தி, 6.25%-ல் இருந்து 6.50% ஆக நிர்ணயித்தது. அதன்பிறகு தொடர்ந்து அப்படியே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து 2026 செப்டம்பர் நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் 5.25% ஆக இருக்கிறது. தற்போது விலைவாசி உயர்வு அதிகரிப்பால் பணவீக்க அபாயங்கள் அதிகரித்துள்ளது. வலுவான பணப்புழக்க நிலை மற்றும் உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள வட்டி விகிதங்களை உயர்த்தும் போக்கு ஆகிய காரணங்களால், இந்திய ரிசர்வ் வங்கி இனி கடினமான முடிவினை எடுக்கும் என்கிறார்கள். குறிப்பாக அக்டோபர் நடைபெறும் கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித உயர்வையும், அதைத் தொடர்ந்து டிசம்பரில் மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்வையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அந்த ஆண்டின் இறுதியில் அடிப்படை ரெப்போ விகிதம் 6%-ஐ எட்டும். செய்தியின் ஆரம்பத்திலேயே கூறியபடி, அதிகப்படியான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவுமே ரிசர்வ் வங்கி இந்த முடிவினை எடுக்க போகிறதாம். அமெரிக்காவை தொடர்ந்து பல்வேறு மத்திய வங்கிகளும் இந்த முடிவினை எடுப்பதால், இந்தியாவும் இதில் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதேநேரம் பொருளாதார வளர்ச்சி மற்றும் விலை நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணுவதும், பணப்புழக்க நிலையைத் தனது பணவீக்க இலக்குகளுடன் இணக்கமாக்குவதும் ரிசர்வ் வங்கிக்கு இப்போது உள்ள பெரிய சவால் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மொத்தம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டால், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், நுகர்வோர் கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு வட் விகிதம் அதிரடியாக வங்கிகளால் உயர்த்தப்படும். மேலும் கடன்பெறும் தகுதிகளையும் மேலும் கடினமாக்கும். இது முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்களை வெகுவாகவே பாதிக்கும் என்பது தான் கசப்பான உண்மை.அது எப்படி பணப்புழக்கத்தை குறைத்தால் விலைவாசி குறையும்
வீட்டு கடன் தனி நபர் கடன் வட்டி உயரும்
கடைசியாக எப்போது உயர்த்தியது
50 புள்ளிகள் உயரலாம்
ஏன் இப்படி ஒரு முடிவு
யாருக்கு பாதிப்பு