தமிழக சிறை துறை DGP சந்தீப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்! சட்டம் ஒழுங்கு தொடர்பில்லாத பதவிக்கு நியமனம்

  • சென்னை: தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியதன் எதிரொலியாக சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார். அவர் சட்டம் ஒழுங்குக்கு தொடர்பில்லாத EBCID-க்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    அது போல் சிறைத் துறை ஏடிஜிபியாக EBCID ஏடிஜிபியாக இருந்த சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் இருந்து கடந்த 26ஆம் தேதி 17 பேர் தப்பியோடினர். அதாவது அன்றைய தினம் ஒரு கைதி வலிப்பு வந்தது போல் நடிக்க, மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். அப்போது என்னவென பார்க்க சென்ற சிறைத் துறை காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கினர்.

    தேனி JAIL BREAKING.. எஸ்கேப் ப்ளானைப் போட்டுக் கொடுத்ததே இவன் தானா? தென்மண்டல ஐஜி அதிர்ச்சி தகவல்!

    காவலர்கள்

    இதையடுத்து அங்கிருந்த மற்ற காவலர்களையும் அவர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்து சாவிகளை பறித்துவிட்டு நுழைவுவாயில் வழியாக தப்பிவிட்டனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்த நிலையில் தனிப்படை அமைத்து தப்பிய கைதிகளை தேடும் பணிகள் நடந்தன. அப்போது பிரவீன் குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார், மாற்றுத் திறனாளி கைதியான பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் உட்பட மொத்தம் 5 பேர் நேற்று முன்தினம் பிடிபட்டனர்.

    டிரோன்

    இதையடுத்து சிறையை சுற்றியிருந்த வனப்பகுதியில் டிரோன் கேமராவை வைத்து கைதிகளை தேடினர். அப்போது அங்கு பதுங்கி பதுங்கி தப்பிய கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் ஆகிய 8 பேர் சிக்கினர்.

    Advertisement
    தேனி சிறையிலிருந்து தப்பிய சகோதரர்கள் சரண்.. தப்பிய குற்றவாளிகள் 17 பேரும் சிக்கினர்! போலீஸ் நிம்மதி

    மொத்தம் 13 பேர் சிக்கியிருந்த நிலையில் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பொன்முத்து, ரெஜின் ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சிக்கிய கைதிகளின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்தது.

    மலை வழியாக தப்பியோட்டம்

    மீதமுள்ள திருப்பதி, மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் சகோதரர்கள், இவர்கள் பதுங்கியிருந்த பகுதிக்கு போலீஸார் சென்ற போது அவர்கள் மலையில் இருந்து வேறு வழியாக மலையடிவாரத்திற்கு ஓடினர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களை தாக்கிவிட்டு பைக்கை பறித்துச் சென்றனர். அப்போது இந்த இரண்டு பேர் மட்டுமே பிடிபடாமல் இருந்ததால் போலீஸார் தரப்பில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.

    Advertisement

    இந்த நிலையில் அவர்களை தேடும் பணியை போலீஸார் இரு கைதிகளின் தாய் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் என் இரண்டு மகன்கள் மீது பொய் வழக்கு போடாதீர்கள். அவர்களுக்கு எந்த சேதமும் இன்றி நீதிமன்றத்தில் ஒப்படையுங்கள். என் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    நிர்மல்குமாரை தூக்குங்க! எஸ்கேப்பான தேனி கைதிகள்.. விசாரணை கமிஷன் கேட்கும் திமுக! பரபர அறிக்கை

    8 மாத கர்ப்பிணி

    எனது மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். ஆகவே எனது மகன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது" என்று அதில் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில் இரு கைதிகளும் நேற்று மாலை வடலூர் காவல் நிலையத்தில் சரணடைய வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அவர்களை வரும் வழியிலேயே கைது செய்தனர். இதன் மூலம் தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டனர். இதனால் போலீஸார் நிம்மதி பெருமூச்சடைந்தனர்.

    இவர்களில் பலர் கொடுங்குற்றங்களை செய்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேனி சிறை கைதிகள் தப்பியது தொடர்பாக 9 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    ரத்தோர் இடமாற்றம்

    இதைத் தொடர்ந்து சிறைத் துறை டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றப்பட்டுள்ளார். ஒரே வயதுடைய கைதிகளை ஒரே அறையில் தங்க வைத்திருந்தது, சிறையில் பாதுகாப்பு பணியில் 35 போலீஸாருக்கு பதில் வெறும் 7 பேர் மட்டுமே இருந்தது, ஒரு வேளை அந்த கைதிகள் தப்பிச் சென்று ஏதேனும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும், புழல் சிறையிலும் 2 கைதிகள் தப்பியோடியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் மாற்றப்பட்டார் என சொல்லப்படுகிறது.

    ஏற்கெனவே சந்தீப் ராய் ரத்தோர் சென்னை கமிஷனராக இருந்த நிலையில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் போது இடமாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது சிறைத் துறை டிஜிபியாக இருந்த ரத்தோர் மாற்றப்பட்டுள்ளார்.