தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணைக்கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலிப்பு வந்தது போல நடித்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் குறித்து தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி அளித்த பேட்டியின் விவரங்களை பார்க்கலாம்.
தேனி மாவட்ட சிறையில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களை தாக்கிவிட்டு விசாரணைக்கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கைதிகள் தப்பி ஓடியதையடுத்து, திண்டுக்கல், தேனி பகுதி முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை, வத்தலகுண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், கார்கள், சரக்கு வாகனங்கள் என ஒன்று விடாமல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரள போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அங்கு, சோதானை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி என்பது குறித்து தென் மண்டல ஐஜி விஜேயேந்திர பிதாரி கூறியாதாவது:- வலிப்பு வந்தது போல நடித்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. விசாரனை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளின் விவரம் உள்ளது. போலீசார் யாருக்கும் காயம் இல்லை. சுமார் 10 மணியளவில் தகவல் கிடைத்தது. எஸ்பி வந்து விசாரித்துள்ளார். குற்றவாளிகளின் விவரம் தற்போது கொடுப்பது சரியாக இருக்காது. விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். தப்பியவர்களை பிடிக்க 17 படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 20 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேனி மட்டுமின்றி மதுரை, விருதுநகர் அன அருகாமையில் உள்ள மாவட்டங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலை அருகே வனப்பகுதிகள் உள்ளதால் அங்கு கைதிகள் பதுங்கியிருக்க கூடும் என்பதால் அப்பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடியவர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கைதிகளின் வீடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் விசாரனை நடப்பதாக சொல்லப்படுகிறது. கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் சிறை நிர்வாகத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடப்பதாகவும் கூறப்படுகிறது. இரவில் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தேனி, திண்டுக்கல், மதுரை சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.எப்படி தப்பி ஓடினர்?
சிறை காவலர்களை தாக்கிவிட்டு.. தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்.. நள்ளிரவில் ஷாக்!
வலிப்பு வந்தது போல நடித்து
தேனியில் வங்கி மேலாளரிடமே ஒரே நிமிடத்தில் 1.75 லட்சம் சம்பாத்தியம்.. கிரெடிட் கார்டால் ட்விஸ்ட்
சிறை நிர்வாகத்தில் யாருக்கேனும் தொடர்பா?
புழல் சிறை கைதி தப்பியது எப்படி? கேபிளை பிடித்து எஸ்கேப்.. அண்ணா நகரில் சுற்றி வளைத்த போலீசார்!
ஒருவர் பிடிபட்டார்