Deva: கொண்டையில் தாழம்பூ டூ உதயம் தியேட்டரில் இதயத்தை தொலைத்தது வரை.. 90 கிட்ஸ்களை கட்டிப்போட்ட தேவா

  • சென்னை: காதல் பாடல்களை கூட கானா பாணியில் கொடுத்து 90 கிட்ஸ்களை தனது துள்ளல் இசையால் கட்டிப்போட்டவர் தேவா. அவரது இசையில் வெளிவந்த கொண்டையில் தாழம்பூ முதல் உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன் பாடல்கள் வரை சில தனித்துவமான ஹிட் பாடல்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    தேனிசை தென்றல் என்று அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவா இன்று காலமானார். 76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    Advertisement

    சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு பிஜிஎம்

    90 ஸ்கள் காலகட்டத்தில் தனது துள்ளல் இசையால் திரை ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவா என்றால் மிகையாகது. 90 களில் பிரபலமாக வானொலிகளிலும் மினி பஸ்களிலும் இவரது பாடல் ஒலிக்காத நாளே இருக்காது. தேவாவின் கானா பாடல்கள் டேப்ரிகார்டரில் ஒலிக்க விட்டுக்கொண்டும் திருமண வீடுகளில் ஒலிக்கப்படும் தேவா பாடல்களுக்கு ஆட்டம் போடுவதும் 90 கிட்ஸ்களில் மலரும் நினைவுகளில் ஒன்றாக தற்போதும் இருக்கும்.

    சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த் பெயர் டைட்டில் கார்டுக்கு கூட இப்போதும் இவரது இசையில் வெளியான தீம் மியூசிக்கே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொண்டையில் தாழம்பூ முதல் உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைச்சேன் பாடல்கள் வரை தேவா இசையில் வெளிவந்த மறக்க முடியாத சில ஹிட் பாடல்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

    Advertisement

    கொண்டையில் தாழம்பூ..

    * கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வழைப்பூ கூடையில் என்ன பூ.. குஷ்பு என்ற பாடல் 90 ஸ்களில் ரொம்பவே பிரபலமான பாடலாக இருந்தது. தேவா இசையில் வெளி வந்த இந்த பாடலின் துள்ளல் இசை, காதல் பாடல்களை கூட கொண்டாட்ட மனநிலையில் கேட்டு ரசிக்கலாம் என்பதை காட்டும் விதமாக அமைந்து இருக்கும். ரஜினி காந்த் நடிப்பில் வெளி வந்த அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் 90 ஸ்களில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆனது.

    அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகம்

    * மீனம்மா.. அதிகாலையிலும், அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே.. என்ற பாடல் தற்போது உள்ள ஜென்சி இளைஞர்களின் பேவைரட் சாங்ஸ்களில் ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையல்ல. எப்.எம்.கள் காலம் தொடங்கி ரீல்ஸ் காலம் வரை ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த பாடல் தேவாவின் இசையில் வெளிவந்த மற்றொரு தவிர்க்க முடியாத பாடலாகும். ஆசை ஆசையாய் 90 கிட்ஸ்கள் முதல் 2 கே கிட்ஸ் வரை ரசித்து கேக்கும் வகையில் இந்த பாடலின் இசையும் அதன் வரிகளும் அமைந்து இருக்கும். அஜித் நடித்த ஆசை படத்தில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

    Advertisement
    அப்பா தேவா மறைவால் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா.. தேசிய விருதை விட அப்பாவுக்கு பெருமை சேர்த்த மகன்!

    உன் உதட்டோர சிகப்ப..

    * தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. என்ற பாடல் தற்போது வரை பலரும் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும். காதல் பாடலா? குத்து பாடலா என்று தெரியாத அளவுக்கு துள்ளல் இசையும் அதன் வரிகளும் கொண்ட பாடல்.. முதல்வர் விஜய்யின் நெஞ்சினிலே படத்தில் இந்த பாடல் வைக்கப்பட்டிருக்கும். தற்போதைய முதல்வர் விஜய்யே இந்த பாடலை பாடியிருப்பார். தேவாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது என சொல்லலாம்.

    Advertisement

    * உன் உதட்டோர சிகப்ப அந்த மருதாணி கடனா கேட்கும்.. கடனா கேட்கும்.. என்ற பாடல் மனதுக்கு இனிமையாகவும், கிராமத்து பின்னணியை தன் கண் முன்னே கொண்டு வரும் வகையில் இருக்கும். பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இடம்பெற்று இருக்கும் இப்பாடல் இப்போதும் 90 ஸ் கிட்ஸ்கள் ரசிக்கும் பாடலாக இருக்கிறது.

    உதயம் தியேட்டரில இதயத்தை தொலைச்சேன்

    * உதயம் தியேட்டரில என் இதயத்தை தொலைத்தேன்.. தேவி தியேட்டரில் அதை தேடி தேடி அலைந்தேன்.. என்ற பாடல் வரி இன்றளவும் ரீல்ஸ்களிலும் எக்ஸ் தளத்திலும் அவ்வப்போது டிரெண்ட் ஆவதை பார்க்க முடிகிறது.

    Advertisement
    தேவாவின் எவர்கிரீன் ஹிட்ஸ் பாடல்கள்.. மறக்க முடியுமா அந்த நினைவுகளை? காலத்துக்கும் அழியாத காவியம்

    ஆனந்த பூங்காற்றே திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், கானா பாடலா... காதல் பாட்டா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு இருக்கும். தேவாவின் தனித்துவமான இசை அமைப்பே இதுதான் என சிலாகிப்பார்கள் தேவா ரசிகர்கள்..

    எருக்கன் செடி ஓரம்

    எருக்கன் செடி ஓரம் இறுக்கிப் பிடிச்ச என் மாமா.. உருகும் நெய்யப் போல உருகித் தவிச்சேனே ஆமா.. என்ற பாடல்கள் 90 கிட்ஸ்களின் ஒன் ஆப் தி பேவரைட் சாங்ஸ்களில் ஒன்று.. இந்த பாடலை கேட்டதும் பலருக்கும்.. கிராமத்து பேருந்து பயணம்தான் நினைவுக்கு வரும். அதுவும் அன்றைய கால கட்டத்தில் இந்த பாடல் ஒலிக்காத நாளே இல்லாமல் இருக்காது. சந்தைக்கு வந்த கிளி படத்தில் இடம் பெற்று இருக்கும்.

    தேவாவின் டாப் 20 காதல் பாடல்கள்

    * முதன் முதலில் பார்த்தேன்.. என்ற அஜித்தின் ஆஹா பட பாடல் இப்போதும் காதலர்களுக்கு விருந்தாக இருக்கும்.
    * நலம் நலமறிய ஆவல் என்ற அஜித்தின் காதல் கோட்டை திரைப்பட பாடல் இப்போதும் இளைஞர்கள், இளம்பெண்களில் பேவரெட்டாக இருக்கும்.
    * உன் பேர் சொல்ல ஆசைதான்.. உள்ளம் உருக ஆசை தான் என்ற விஜய்யின் மின்சார கண்ணா பட பாடல் இப்போதும் ரீல்ஸ்களில் டிரெண்டிங்கில் இருக்கும்.

    Deva: தம்பி இறந்த சோகம் மறைவதற்குள் அண்ணனும் மறைந்தார்.. சோகத்தில் தேனிசை தென்றல் தேவா குடும்பம்

    * வண்ண நிலவே வண்ண நிலவே.. வருபது நீ தானா.. என்ற விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாடல்..
    * செம்மீனா விண்மீனா என்ற அஜித்தின் ஆனந்த பூங்காற்றே பட பாடல்..
    * மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்.. என்ற விஜய் - ஜோதிகா ஜோடியின் குஷி பட பாடல் இப்போதும் இளைஞர்களின் பேவரெட் சான்ஸ்காக இருக்கும்.

    பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா..

    * கொஞ்ச நாள் பொறு தலைவா.. என்ற அஜித்தின் ஆசை பட பாடல்..
    * என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு.. என்ற விஜயகாந்தின் சொக்கத்தங்கம் பட பாடல்..
    * ஊதா ஊதா ஊதாப்பூ.. என்ற விஜய்யின் மின்சார கண்ணா பட பாடல்..
    * மனம் விரும்பதே உன்னை விஜய் - சூர்யா நடித்த நேருக்கு நேர் பட பாடல்..
    * மனசே மனசே கதவைத் திற என்ற விஜய்யின் நெஞ்சினிலே பட பாடல்..
    * கனவே கலையாதே என்ற கண்ணெதிரே தோன்றினாள் பட பாடல்..

    இது தேவா பாட்டு சார்..இளையராஜா - ஏஆர் ரஹ்மானை தாண்டி ஜொலித்த 'தேனிசைத் தென்றல்’ தேவா! மறக்க முடியுமா?

    * தாஜ்மஹால் ஒன்று என்ற கண்ணோடு காண்பதெல்லாம் பட பாடல்..
    * பூவே பூவே செம்பூவே என்ற விஜய்யின் ஒன்ஸ் மோர் பட பாடல்..
    * பாரதிக்கு கண்ணம்மா.. நீ எனக்கு உயிரம்மா.. என்ற விஜய்யின் பிரியமுடன் பட பாடல் இப்போது இளைஞர்கள் ரசிக்கும் பாடலாக உள்ளது.
    * காதலா காதலா என்ற கமல்ஹாசனின் அவ்வை சண்முகி பட பாடல்..
    * சோனா சோனா என்ற அஜித்தின் வாலி பட பாடல்..
    * பூக்கார பூக்கார என்ற அஜித்தின் சிட்டிசன் பட பாடல்..

    English Summary

    Deva: Here, we take a look at some unforgettable hit songs composed by Deva—ranging from "Kondaiyil Thaazhampoo" to "En Idhayathai Tholaichen" (from the film *Udhayam*).