அதிமுகவை அழிக்கனும்.. திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தனும்! ஆர்எஸ்எஸ் ப்ளானே அதுதான்! திருமா அட்டாக்!


  • அரியலூர்: அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும். திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. இதை குறி வைத்தே அண்ணாமலையும் காய் நகர்த்துகிறார். அல்லது அண்ணாமலையை நகர்த்தி இருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    Advertisement

    அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியன் நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Advertisement

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்," தமிழ்நாட்டில் நலன்களை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உறுதியாக இருக்கிறது என தெரிகிறது. தமிழ்நாடு உணர்வுகளை மீறி கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. இந்திய ஒன்றிய அரசு ஒரு சார்பு நிலையை எடுக்காது என நான் கருதுகிறேன்.

    திருமாவளவன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளதை விசிக கட்சி சார்பில் வரவேற்கிறோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்படி ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டால் அதனை வரவேற்கிறோம். நாகர்கோவிலில் நடந்து இருக்கிற உயிரிழப்பு பெரும் துயரம் அளிக்கிறது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் உடலில் காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகிறது. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    Advertisement
    பழனி கோவில் நில மோசடி.. மோசடி செய்து வாங்கியது யார்? விடை கிடைக்காத 3 மர்ம கேள்விகள்!

    காவல் மரணம்

    காவல் நிலையங்கள் சிறை கொட்டகைகளில் விசாரணை கைதிகளாக அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களாக அழைத்து செல்லப்படுபவர்களுக்கு அல்லது சிறைப்படுத்தப்படுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறை, சிறைத்துறை மற்றும் காவல்துறைக்கும் உள்ளது. ஆனால் அவ்வப்போது இதுபோல அத்துமீறல்கள், படுகொலைகள் அரங்கேறுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    முதலமைச்சர் விஜய்யை பார்க்க போன டி.கே.கலா.. கில்லி பட நடிகைக்கே இந்த நிலைமை? சென்னையில் என்ன நடந்தது

    மகளிர் இட ஒதுக்கீடு

    இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கூறினார். நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொகுதி மறு வரை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது. கடந்த முறை அவர்கள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து நின்று கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அப்போது நிறைவேற்றப்படாமல் தடுக்கப்பட்டது.

    Advertisement
    ஃப்ரிட்ஜ் வாங்க வாக்காளர்களுக்கு கூப்பன் கொடுத்த விஜயபாஸ்கர்? தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!

    எதிர்க் கட்சிகள்

    தொகுதி மறு வரையறை இந்த முறையில் அறிமுகப்படுத்தினால் அதனை நிறைவேற்றப்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகள் அனைவருக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தொகுதி மறு வரை மசோதாவை ஏற்க மாட்டார்கள். கடுமையாக எதிர்ப்பார்கள் என நான் எண்ணுகிறேன். இந்த முறையும் அது முறியடிக்கப்படும் என நம்புகிறேன்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதை தொடக்கத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டி வருகிறது. தவெகவிலிருந்தும் சிலரை அப்படி விலை கொடுத்து வாங்குவதற்கு முயற்சி நடக்கிறது என்று புகார் அளித்துள்ளார்கள் அதே போன்று தவெக மீது திமுக, அதிமுக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்கள். இந்த போக்கு ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும் என்பதை மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சி சுட்டி காட்டுகிறது.

    Advertisement

    பாஜக, ஆர்எஸ்எஸ்

    தமிழ்நாட்டில் இரு துருவ அரசியலை நிலை நாட்ட வேண்டும் என்ற முனைப்பு தவெகவிற்கு இருக்கிறது. அதிமுகவை முற்றாக அழித்து ஒழிக்க வேண்டும். திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நீண்ட காலமாகவே செயல்பட்டு வருகிறது. இதை குறி வைத்தே அண்ணாமலையும் காய் நகர்த்துகிறார். அல்லது அண்ணாமலையை நகர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் அவர் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து மாநாடுகள் பொதுக்கூட்டங்களை நடத்துகிறார்.

    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் ஆதரவு அளிக்கக்கூடிய சமூகங்கள் வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்பி சமூக பின்னணியோடு அவர்களை தங்கள் பக்கம் இழுத்து விட்டால் அதிமுக மேலும் பலவீனப்படுத்த முடியும், செயலிழக்க செய்ய முடியும், முற்றும் இல்லாத நிலையை உருவாக்கி விட முடியும். அண்ணாமலை அவர்களை பின்னிருந்து சங்பரிவார் கும்பல் இயக்குவதாக நினைக்கிறேன்.

    Advertisement

    திமுக - அதிமுக

    மொத்தத்தில் முதலில் அதிமுகவை பலவீனப்படுத்துவது, திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துதான் சங்பரிவார்கள் சூழ்ச்சியாக உள்ளது. சூழ்ச்சி நிறைந்த அரசியல் கொண்டிருக்கிறது என நான் கருதுகிறேன். இந்த போக்கும் தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்புடையது அல்ல என கூறினார்.

    English Summary

    VCK leader Thirumavalavan claims RSS and BJP aim to weaken AIADMK and Dravidian parties through a long-term political strategy.