SIR-ஆல் தான் ஸ்டாலின் தோற்றார்.. ’கொளத்தூர் கொத்து பரோட்டா’ பர்னிச்சரை உடைத்த திருமா! விஜய் ஷாக்!

  • சென்னை: SIR-ஆல் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டார். கெஜ்ரிவால், மம்தா, பினராயி போன்றவர்களும் SIR-ஆல் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்த்து சென்னை எழும்பூரில் நடந்த போராட்டத்தில் பேசியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். தான் பேசியதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டார் என முதல்வர் விஜய் பேசியிருந்த நிலையில், எஸ்ஐஆரால் தான் ஸ்டாலின் தோற்றதாக திருமா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் special intensive revision எனப்படும் எஸ்ஐஆர்-ஐ நடைமுறையை அமல்படுத்தியது. அதாவது இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் பிற காரணங்களால் இரட்டை வாக்குகளோடு இருப்பவர்களை நீக்கும் பொருட்டு இந்த நடைமுறையானது மேற்கொள்ளப்பட்டது.

    Advertisement

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரது கட்சிகள் ஆட்சியை இழந்ததோடு அவர்களும் தோற்றனர்.

    எஸ்ஐஆர்

    எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் தான் அவர்கள் தோற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. டெல்லியில் இதனை கண்டித்து காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்தது. தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டத்தில் குதித்த நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement
    கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக சதி! சேகர்பாபுவுக்கும் தெரியும்! திருமாவளவன்

    திருமாவளவன்

    இந்த நிலையில் தேர்தல் ஆணையரை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், தவெக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்," ஒரு பெண்மணி எனக்கு தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்றார். அந்த பெண் கூறியதை மு.க.ஸ்டாலினிடமும், சேகர் பாபுவிடமும் கூறினேன். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் கூறினேன்.கொளத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர். மூலம் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன" என்றார்.

    Advertisement
    விசிக இல்லாமலே 2வது இடம் பிடித்த திமுக.. பெரும் கலக்கத்தில் திருமாவளவன்! புலம்ப ஸ்டார்ட் பண்ணிட்டாரே

    மு.க.ஸ்டாலின்

    திருமாவளவனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதாவது எஸ்ஐஆர் நடவடிக்கையை தமிழகத்தில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டபோது ஒருவரது வாக்குகள் கூட பறிபோக கூடாது என திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். அதனை திமுக தலைவர் ஸ்டாலினே பாராட்டி இருந்தார்.

    கொளத்தூர் கொத்து பரோட்டா

    இந்த நிலையில் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய் தான் ஐந்து நிமிடம் பேசியதற்கு கொளத்தூர் மக்கள் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள் என பேசி இருந்தார். இதற்கு கண்டனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் அதே வார்த்தையை பயன்படுத்தி திமுகவினரை விமர்சித்து வந்தனர்.

    Advertisement

    விஜய்

    தற்போது திருமாவளவன் பேச்சின் மூலம் எஸ்ஐஆர் நடவடிக்கையால் தான் ஸ்டாலின் தோற்றார் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் தான் பேசியதால்தான் ஸ்டாலின் தோற்றார் என விஜய் பேசி வந்த நிலையில் விஜய்யின் பேச்சுக்கு மதிப்பில்லை என்பதை அவரது கூட்டணி கட்சியில் அங்கம் ஆட்சியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனே ஒப்பு கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது விஜய் தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    VCK leader Thirumavalavan alleges SIR deleted one lakh votes in Kolathur, linking the voter revision controversy to MK Stalin’s electoral defeat.