என்னாது சோஃபாவா? நான் வெளிப்படையாக பேசினால்.. திமுக விமர்சனம் குறித்து திருமாவளவன் ஆதங்கம்

  • சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புதியதொரு விளக்கத்தை அளித்துள்ளார். அது போல் நான் வெளிப்படையாக பேசினால் நன்றாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. வேறொரு கூட்டணியில் இருந்த விசிகவுக்கு எப்படி மகிழ்ச்சியை தரும்? ஆனால் அதிமுக போன்ற கட்சிகளை தவிர்த்துவிட்டு மதச்சார்பற்ற சக்தியாக விளங்கும் எங்களை அழைத்து ஆதரவு கேட்டது தவெகவின் துணிச்சலான முடிவு.

    Advertisement

    திமுக கூட்டணியில் விசிக இல்லை என அந்த கட்சிதான் கூறியது. கூட்டணியில் இருந்து நாங்களாக வெளியேறவில்லை, நான் தவெக கூட்டணியில் இருப்பதாகவும் அறிவிக்கவில்லை. இனி தவெக தலைமையில் கூட்டணி உறுதியானால் அந்த கூட்டணியில் இடம் பெறுவோம்.

    குதிரை பேரம் விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இருந்தால் தலையிட வேண்டும். திமுக கூட்டணியில் இருந்த போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கரின் நூலை வெளியிட்ட போது நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தலுக்கு முன்பே எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்த போதும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒரு போதும் இடம் தரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக தலைமைக்குத் தகவல் கொடுத்தேன்.

    Advertisement

    தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கிய போதே திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி இணைத்த போது திமுக தலைமை சொல்லுகிறது விசிக எங்களுக்கு உறவில்லை என கூறினார்கள். இதுவரை நான் அப்படி கூறவில்லை.

    திமுக கூட்டணியில் விசிக இல்லை என முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் சொன்னார். நான் அந்த நட்பை ஒரு போதும் சிதைக்கவில்லை. எனது மதிப்புக்குரியவர் மீதான மதிப்பு என்றைக்கு குறையாது. திமுகவுக்கு நான் துரோகம் இழைத்தேனா? என் நட்பு எவ்வளவு தூய்மையானது என்பது எல்லாருக்குமே தெரியும்.

    விசிக ஏன் 234 தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. அதற்கான வலிமையை ஏன் திருமாவிடம் கொடுக்கவில்லை என்பது குறித்து நாம் விவாதித்ததில்லை. எதன் அடிப்படையில் தவெகவை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்வி வந்தது.

    Advertisement

    எனது தாமதத்தை சோபா, பார்ட்டி பண்ட், துணை முதல்வர், முதல்வர் பதவிக்காக என பலவகைகளில் என்னை விமர்சனம் செய்கிறார்கள். சிலவற்றை வெளிப்படையாக பேச முடியாது. வாய்ப்புகளை நான் நிராகரித்தேன். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    English Summary

    VCK President Thirumavalavan clarifies that his party has not left DMK led alliance. He strongly condemn DMK for criticising him.