திருமாவளவன் என் ஆசான்.. சட்டென சொன்ன உதயநிதி ஸ்டாலின்! யாரும் எதிர்பார்க்கலையே!

  • சென்னை: திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்ததிலிருந்து பல்வேறு விமர்சனங்களை உடன்பிறப்புகளால் அக்கட்சி எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் என்னுடைய ஆசான் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    அவர் பேசியதாவது, "எங்கள் தலைவருக்கும், அண்ணன் தொல்.திருமாவளவனுக்கும் இடையே இருந்தது வெறுமென தேர்தல் உடன்பாடு, தேர்தல் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியாகவும், தேர்தலுக்கு பின்னர் மாறும் கூட்டணியா இது இல்லை. இது கொள்கை கூட்டணி. இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் எனில், என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது தொல் திருமாவளவன்தான் என்றும் பலமுறை கூறியிருக்கிறேன். எனவே என்றைக்குமே தொல்.திருமாவளவனுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என பேசியிருக்கிறார்.

    Advertisement

    திருமாவளவன்தான் ஆசான்

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விசிகவினரால் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர்களை பாராட்டி அமைச்சர் வன்னி அரசு பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பதிலளித்தபோதான்.. திருமாவளவனுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்திருக்கிறார்.

    சமீப நாட்களாக விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே சலசலப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் சட்டமன்றத்தில் வைத்து, திருமாவளவன்தான் என்னுடைய ஆசான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அடுத்தடுத்து தவெகவில் இணைவார்கள் என்று தவெக நிர்வாகிகள் பேசி வந்தனர். கட்சி நிர்வாகிகள் பேசினால் பரவாயில்லை.. ஆனால் அமைச்சர் செங்கோட்டயனும் இதையே பேசியது கூட்டணியில் இருக்கும் விசிக, இடதுசாரிகளுக்கு டென்ஷனை ஏற்படுத்தியது.

    Advertisement

    ஊழல் குற்றச்சாட்டு

    இப்படி இருக்கையில்தான், விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் ரஜினிகாந்த், "தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வாழிகளால் நிரம்பிய கூடாரமாக மாறுகிறதோ என்கிற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது" என்று பேசியிருந்தார். இதை தவெக தலைமை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. நாம இடம் கொடுத்த கட்சி.. இன்னைக்கு நம்மளையே ஊழல் பேர்வாழினு பேசுறாங்க என தவெகவினர் கொந்தளித்தனர்.

    வன்னி அரசு பேசும்போது குறுக்கீடு

    போதாத குறைக்கு.. சட்டமன்றத்தில் விசிக அமைச்சர் வன்னி அரசு என்ன பேசினாலும்.. முழுமையாக பேசவிடாமல் சபாநாயகரும், தவெக அமைச்சரும் குறுக்கீடு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இன்னைக்கு காலையில் கூட.. வன்னி அரசு பேசும்போது திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார். உடனே குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.. மானிய கோரிக்கையை மட்டும் வாசிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கவனம் பெற்றிருக்கிறது.

    English Summary

    Thirumavalavan: Since the Viduthalai Chiruthaigal Katchi (VCK) aligned itself with TVK after exiting the DMK alliance, the party has faced various criticisms from DMK cadres. Against this backdrop, Leader of the Opposition Udhayanidhi Stalin’s statement in the Assembly today—referring to VCK leader Thirumavalavan as his mentor—has drawn significant attention.