மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத்திட்டம்.. முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு

  • சென்னை: வெற்றிப்பயணத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தியதற்கு நன்றி என்றும்
    இது சிறுத்தைகளின் சமூகநீதிக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டி உள்ளார்.

    Advertisement

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பில்,
    "தமிழ்நாடு அரசு வெற்றி பயணத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லா பேருந்து சேவை தற்போது பெண்கள் மற்றும் திருநர்களுக்கு விரைவு (Express), குறைந்த நிறுத்தங்கள் கொண்ட சேவை (LSS), சொகுசு்(Deluxe) பேருந்துகளுக்கு நீட்டிக்கப்பட்டு இதனை முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் துவக்கி வைத்துள்ளது பாராட்டுக்குரியது.

    Advertisement

    பெண்கள், திருநர் போன்றே அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுகிற சமூகமான மாற்று திறனாளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கடந்த 09.09.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கைக் வைக்கப்பட்டது

    தற்போது தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த அறிவிப்புனை உறுத்திப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் இதற்கான அரசாணையினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்த வெற்றிப்பயணம் திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்க முடியும். மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,695 பேருந்துகளில், 1,68,500 தினசரி நடைகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள்,

    Advertisement

    மாநகரம் / நகர்ப்புறங்களில் சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலகஸ் சேவைகள், புறநகர்களில் சாதாரண சேவைகள், மலைப்பகுதிகளில் சாதாரண சேவைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டம். இடைத்தேர்தல் காரணமாக, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக விரிவாக்கப்படும் பேருந்து சேவைகள் திட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டம் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்ட பின்னர் நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய நிலையில் இந்த மாவட்டங்களில் கட்டணமில்லா பேருந்துகளான பிங்க் பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள் பயணிக்க முடியும்.

    English Summary

    VCK leader Thol. Thirumavalavan has expressed appreciation for CM Vijay regarding the inclusion of welfare plans for persons with disabilities in his govt's "Vetri Payanam" roadmap.