தேமுதிகவுக்கு அதிக சீட்.. கண்ணை ஏன் உறுத்துதுன்னு கேட்ட பிரேமலதா.. திருமாவளவன் கொடுத்த விளக்கம்

  • சென்னை: தேமுதிகவுக்கு அதிக சீட் கொடுப்பதால் உங்க கண்ணு ஏன் உறுத்துது என பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கேட்டிருந்த நிலையில் இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் பதிலளித்துள்ளார். தேமுதிகவுக்கு 10 இடங்கள் வழங்கிய போது அதை முழு மனதோடு வரவேற்று, அதற்கான காரணங்களையும் விளக்கிய ஒரே கட்சி விசிக தான்.. ஒரே நபர் திருமாவளவன் தான் என்றும் அவர் கூறினார்.

    Advertisement

    தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    Advertisement

    கசப்பு இருக்காதா?

    பிரேமலதா நாங்கள் தேமுதிகவை விமர்சித்ததாக எண்ணிக்கொண்டு கருத்துகளை கூறியிருக்கிறார். திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேற பதவி ஆசை மட்டுமே காரனம் என பலரும் விமர்சித்து வருகிறார்கள். துரோக பட்டங்களையும் சூட்டி வருகிறர்கள். அவர்களுக்கு விடை அளிக்கும் வகையில் நான் திருமண விழாவில் பேசும் பொது, அது மட்டும்தான் காரணமா?

    திமுகவுக்கும், உடன் இருந்த கட்சிகளுக்கும் உறவு எப்படி இருந்தது என்பது குறித்தும் விவாதத்திற்கு எடுத்துகொள்ள வேண்டாமா? என்று கருத்துகளை சொன்னேன். அப்படி காரணங்களை சொல்லும் போதும் திடீரென தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தது குறித்தும் அதற்கு 10 இடங்கள் வழங்கப்பட்டது குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு கசப்பு இருக்காதா? என்ற கோணத்தில் பேசினேன் அவ்வளவுதான்.

    Advertisement

    நான் மேற்கொண்டு கருத்து சொல்லவில்லை

    தேமுதிகவுக்கு 10 இடங்கள் வழங்கிய போது அதை முழு மனதோடு வரவேற்று அதற்கான காரணங்களையும் விளக்கிய ஒரே கட்சி விசிக தான்.. ஒரே நபர் திருமாவளவன் தான். பலரும் அந்த நேரத்தில் தேமுதிகவை வெறுமனே திமுகவிற்குள் இணைத்துக்கொண்டதை விமர்சித்ததை அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனை வரவேற்றது நான் தான். இன்றைக்கும் ஏன் அவர்களை சேர்த்தீர்கள்.

    அவ்வளவு சீட் கொடுத்தீர்கள் என்ற கோணத்தில் கருத்து சொல்லவில்லை. உடன் இருந்த கட்சிகளுக்கு திமுகவோடு இருந்த உறவு. பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் உண்டு. என்று பல காரணிகளை அடுக்கிய போது, தேமுதிகவை திமுக கூட்டணிக்கும் திடீரென இணைத்ததும் ஒரு காரணம் என்ற கோணத்தில் கருத்து சொன்னேன். அவ்வளவுதான். ஆனால் நாங்கள் ஏதோ தேமுதிக மீது காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறோம் என்ற கோணத்தில் கருத்து சொல்லியிருக்கிறார்.

    Advertisement

    அவரது கருத்து அவருடைய கருத்தாகவே இருக்கட்டும். நான் மேற்கொண்டு கருத்து சொல்லவில்லை. இடைத்தேர்தலை பொறுத்தவரை மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணியில் இருக்கிறோம். அந்த வெற்றிக் கூட்டணி இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் பணிகள் இருக்கும்" என்றார்.


    பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன?

    சகோதரர் திருமாவளவன் மீது எனக்கு இப்போது வரை மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. நேர்மையான நபர் தான் அண்ணன் திருமாவளவன்.. ஆனால் இன்றைக்கு அவருடைய நிலைப்பாடு மாறினதாலும், அவர்களுக்கு ஒரு அமைச்சர் கிடைத்ததனாலும், இன்னொரு கூட்டணிக்கு போயிருக்காங்க.. இது தான் உண்மை.. யாரும் மறைக்க முடியாது. கம்யூனிஸ்ட்கள் கூட இருக்காங்க.. அவங்க எங்களுக்கு எல்லாம் அமைச்சர் பதவிகள் வேண்டாம்.. வெளியில் இருந்து மட்டும் ஆதரவு என சொல்லியிருக்காங்க அல்லவா..

    Advertisement

    அதே மாதிரி நீங்களும் செய்ய வேண்டியது தானே.. ஏன் நீங்க செய்யல.. நீங்களும் எங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என சொல்லியிருக்க வேண்டியது தானே.. அமைச்சர் கிடைச்சு இருக்கு.. நீங்க கூட்டணிக்கு போய் இருக்கீங்க.. எல்லா கட்சியும் இருக்கும்.. ஆனால் ஏன் தேமுதிகவை கண்டால் மட்டும் ஏன் இப்படி.. ஜெயிச்சது இரண்டு இடம். அதில் ஒரு அமைச்சர்.. இதுக்கு ஏன் தேமுதிகவை இழுக்குறீங்க.." என பேசியிருந்தார்.

    English Summary

    Thirumavalavan VCK leader, has responded to Premalatha Vijayakanth, who had angrily asked why the allocation of a large number of seats to the DMDK was causing resentment. He stated that the VCK was the only party—and he, Thirumavalavan, the only individual—to wholeheartedly welcome the allocation of 10 seats to the DMDK and explain the reasons behind it.