சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, தவெக தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது. இதனை விமர்சிக்கும் விதமாக திமுக எம்பி ஆ.ராசா ட்வீட் செய்திருந்து அரசியல் களத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவனின் ரியாக்ஷன் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றி, திமுகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. அதைவிட பெரிய சிக்கல், திமுக கூட்டணியிலிருந்த கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததுதான்.
விஜய் பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் ஓடிச்சென்று உடனடியாக ஆதரவு கொடுத்தது. காங்கிரஸை பொறுத்தவரை, 2 அமைச்சர்களை கேட்டு பெறுவது என்பதுதான் இலக்கு. காங்கிரஸை தொடர்ந்து இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். ஆனால், அமைச்சரவையில் பங்கு பெற மாட்டோம் என்றும், வெளியிலிருந்து ஆதரவளிப்போம் எனவும் கூறியிருந்தனர். அதுபோலவே, தற்போது வரை இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்காமல் தனித்து நிற்கின்றனர். இடதுசாரிகளை தொடர்ந்து, ஐயுஎம்எல் மற்றும் விசிக என இரண்டு கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. இதில் விசிகவின் நிலைப்பாடு, இடதுசாரிகளின் நிலைப்பாட்டை ஒட்டியே இருக்கும் என்று திருமாவளவன் விளக்கமளித்திருந்தார். நாங்களும் வெளியிலிருந்து ஆதரவளிப்போம் என்று கூறியிருந்தார். ஆனால், நாட்கள் நகர நகர காட்சிகள் மாறின. விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றினார். தவெக தலைமையிலான ஆட்சியில் பங்கெடுப்பது என்கிற முடிவுக்கு விசிக வந்தது. இன்று விசிகவின் வன்னியரசு தவெக அமைச்சரவையில் சமூகநீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். திமுக எம்பி ஆ.ராசா தனது ஆதங்கத்தை திருமண முறிவு என்றெல்லாம் விமர்சித்து x தளத்தில் பதவிட்டிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடினமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை உத்தரவிட்டுவிட்டது. இதனையடுத்து, அந்த ட்வீட் டெலீட் செய்யப்பட்டது. இருப்பினும்.. என் வீட்டுத் தோட்டத்துத் என்று பதிவிட்டு விசிகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு அவர், கையெடுத்து கும்பிட்டு கிளம்பிவிட்டார். திருமாவளவனின் ரியாக்ஷன் அரசியல் களத்தில் கவனம் பெற்றிருக்கிறது.விஜய்க்கு ஆதரவு
விசிக நிலைப்பாடு
அமைச்சரவையில் விசிக
திமுகவின் அதிருப்தி
முடத்தெங்கு அரசியல்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
"முடத்தெங்கு"!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!திருமாவின் ரியாக்ஷன்