சென்னை: நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப் போவதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் கிளம்பி வருகிறது. அவர் கட்சி ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த செய்திகள் யூகங்களாக தான் உள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத சூழலில், கருத்து சொல்ல எதுவுமில்லை. ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் அரசியலில் ஈடுபட உரிமையும், சுதந்திரமும் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நடிகராக இருந்து தற்போது முதல்வராகி இருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். 2026 சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை அவர் பெற்றிருக்கும் நிலையில், பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வரத் தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் யூகங்கள் பரவி வருகிறது. சமீபத்தில் கூட தனுஷ் டெல்லி சென்ற நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக தான் டெல்லி சென்றார் என சிலர் கூறி வருகின்றனர். மேலும் பாஜக ஆதரவுடன் தனுஷ் அரசியலுக்கு வருவார் என்றும் யூகங்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வகையில் தனுஷ் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது எனவும், அதே நேரத்தில் அது யூகமாக இருப்பதால் பதில் சொல்ல தேவையில்லை எனக் கூறியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விசிக மாவட்ட செயலாளரின் மகள் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்," நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதற்கு திமுக தரப்பில் பதில் சொல்வார்கள். டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை நான் வழிமொழிகிறேன். மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் மாறும், தேர்தல் மாறும். நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து அவர் இன்னும் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் பொதுத்தேர்தலை விட திமுகவின் வாக்கு வங்கி குறைந்தது என சொல்லியுள்ளார். இடைத்தேர்தலை விட பொதுத்தேர்தலில் திமுகவுக்கு வாக்கு வங்கி குறைந்து விட்டதாக ஆதாரத்தோடு சொல்வதாக எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். ஆதாரம் இருந்தால் தான் விளக்கம் சொல்ல முடியும். ஒரு நாள் மழையிலேயே சென்னை மிகப்பெரிய வெள்ளக்காடாக மாறி இருக்கிறது. தவெகவினர் அரசியலுக்கும் ஆட்சிக்கும் புதியவர்கள் என்றாலும் கூட, அவர்களுடைய சக்திக்கு ஏற்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குரிய நலன்களை பாதுகாப்பதில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஒருபோதும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்" என்றார்.தனுஷ்
திருமாவளவன்
தமிழ்நாடு அரசு
எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடன் கூட்டணி