தவெகவில் ஒரு கால்.. திமுகவில் ஒரு கால்! 2 சீட்டில் துண்டைப் போடும் திருமா! குழப்பத்தில் சிறுத்தைகள்


  • சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் கூட்டணி நிலைப்பாடு தமிழக அரசியலில் தற்போது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக வெற்றிக்கழக கூட்டணி அரசில் பங்கேற்று இருந்தாலும், தவெக கூட்டணியில் முழுமையாக இணைந்து விடவில்லை.. திமுகவுடன் அரசியல் உறவு தொடர்கிறது என அவர் பேசி இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஏன் திருமாவளவன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்? என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்தது. முதலில், காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவளித்தன.

    Advertisement

    ஆரம்பத்தில் ஆட்சியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்த விசிக பின்னர் அமைச்சரவையிலும் பங்கேற்றது. அமைச்சரவையில் பங்கேற்ற தொடங்கும் தவெக கூட்டணியில் இணைந்து விட்டோம் என்று திருமாவளவன் ஒரு நாள் கூட சொல்லவில்லை.

    திருமாவளவன்

    தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகவில்லை.. கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.. எங்கள் அரசியல் முடிவுகள் அனைத்தையும் திமுகவுடன் பகிர்ந்து வருகிறோம். அந்த உறவு தொடரும் என அவர் பேசியது பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடந்த பிரச்சாரத்தில் சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்று எடுத்த பிள்ளைகள் என அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    விஜய்

    இந்த நிலையில் தற்போது அதே விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பது விசிக மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அவ்வப்போது தனது பழைய கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார் திருமாவளவன். இதற்கிடையே ஐந்தாண்டுகள் தவெக நீடிக்க வேண்டும் என கூறி வரும் திருமாவளவன். மறுபடியும் கூட்டணி குறித்து தெளிவற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவது தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    மாணிக்கம் தாகூர்

    மேலும் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இடையே வார்த்தை போரும் ஈடுபட்டு வருகிறது. இடையில் அதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திருமாவளவன் சொன்ன கருத்துக்களுக்கு கிண்டலாக பதில் அளித்தார் திருமாவளவன். ஏன் அவர் இரட்டை அணுகுமுறையை பின்பற்றுகிறார் என்பதற்கு சில காரணங்களை அந்த கட்சியினர் முன்வைக்கின்றனர். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் விஜயுடன் கூட்டணி வைத்ததை வரவேற்றாலும், மூத்த நிர்வாகிகள் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற கருத்தில் இருக்கிறார்கள்.

    Advertisement
    பனையூர் பாபு அணுகிய போது திமுக என்ன சொல்லியிருக்க வேண்டும்? வலியில் பேசிய திருமாவளவன்

    விசிக

    இதனால் விசிக உள்ளேயே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்படுகிறது. கூட்டணியை விட்டு சென்று விட்டதால் விசிகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக இழுக்க முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பனையூர் பாபு திமுகவில் சேர்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்லலாம், இதனால் திமுகவை முழுமையாக எதிர்க்க திருமாவளவன் தயங்குகிறார் என்கின்றனர்.

    அமைச்சரவை

    இரண்டாவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயை மிகக் கடுமையாக விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் நிலையில் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் விஜய் புகழ் பாடினால் அரசியலுக்காக பதவிக்காக திருமாவளவன் விலை போய்விட்டார் என்ற விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தான் இப்படி மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்கிறனர்.

    Advertisement
    கட்டாயமாக்கப்பட்ட வந்தே மாதரம்! பாஜகவின் மதவாத அரசியல்! விஜய் ஏற்கக் கூடாது! திருமாவளவன் அட்வைஸ்

    பாமக - தவெக

    மூன்றாவதாக பாமக மற்றும் தவெக இடையே நெருக்கம் வருவதையும் கவனிக்க வேண்டும். அன்புமணி முதல்வர் விஜய் நேரில் சந்தித்து அவர் வைத்த கோரிக்கைகளை உடனடியாக ஏற்று ஆர்டர் பிறப்பித்தது விசிகவை கவனிக்க வைத்திருக்கிறது. வட தமிழக மற்றும் டெல்டா பகுதிகளில் பாமகவின் வாக்கு வங்கி தவெகவுக்கு பலம் சேர்க்க கூடும். எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு பாமகவை கூட்டணி கொண்டு கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளும் தொடங்கி இருக்கிறது.

    Advertisement

    திமுக கூட்டணி

    அப்படி ஒரு சூழல் உருவானால் விசிக திமுக கூட்டணியை நோக்கி நகரலாம். ஆனால் திமுக தங்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமா? என்ற சந்தேகம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது. அதனால் தவெக கூட்டணியில் இருந்தாலும், திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்ற ஒரு விபத்தை உருவாக்கவே இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் திருமாவளவன் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English Summary

    Thirumavalavan’s remarks on TVK and DMK ties have sparked debate over VCK’s alliance strategy despite being part of the ruling coalition.