சென்னை: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டால் தோற்றுவிடுவார் என என்னை தொடர்பு கொண்ட ஒரு பெண் கூறியதுமே, அந்த விஷயத்தை நான் அவரிடமும் சேகர்பாபுவிடமும் சொல்லிவிட்டேன், ஆனால் அவர் கேட்கவில்லை. அங்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் பதவி விலகக் கோரி சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் எஸ்ஐஆர் நடவடிக்கைகளால் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், கொளத்தூர் தொகுதிகளில் எஸ்ஐஆர் மூலம் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து என்னை ஒரு பெண் தொடர்பு கொண்டு, கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டால் அவர் வெல்வது கடினம் என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான் உடனே இந்த விஷயத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடமும், சேகர்பாபுவிடமும் தெரிவித்தேன். எனது தொகுதியில் நீங்கள் ஏன் மாற்றி போட்டியிடக் கூடாது என கேட்டேன். ஆனாலும் அவர் கொளத்தூரிலேயே போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார். வாக்காளர் திருத்த பட்டியலில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன்,வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் ஞானேஷ் குமார் பதவி விலகினால் மட்டுமே போதுமா? ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு முதற்படியாகதான் சங் பரிவார் அமைப்புக்கு துணை போன தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தரையில் படுத்து உருண்டு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். பாஜகவின் முகத்திரை கிழிந்துவிட்டது. அவர்களது வெற்றி என்பது திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவு. குறிப்பாக மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை குறி வைத்து அவர்கள் இந்த வேலையை செய்துள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் அவர்களால் கைவரிசை காட்ட முடியாது. தமிழகத்திலோ கேரளாவிலோ பாஜகவால் எதையும் அசைக்க முடியாது என்கிற அளவுக்கு மக்கள் தொடர்ந்து அவர்களை புறக்கணித்து வருகிறார்கள். மத்திய இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் வெற்றி பெற்றாலே போதும் அவர்களுக்கான தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். அந்த வரிசையில்தான் இந்த எஸ்ஐஆர் கைவரிசையை காட்டி அரசியல் பகைவர்களை சொல்லி வைத்தாற் போல் காலி செய்து வருகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், ஸ்டாலின் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வந்த போது இவர்கள் எல்லாம் தன்னியல்பாக தோற்றவர்களாக தெரியவில்லை என்றேன். குறி வைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்று நான் கூறியிருந்தேன். தமிழகத்தில் மட்டும் 97 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்ததும் இதை ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். சேகர்பாபுவிடமும் எடுத்து சொன்னேன். யாரோ ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "சதி நடக்கிறது, கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம்" என்றார். முதல்முறை நான் அலட்சியப்படுத்தினேன். ஆனால் அந்த பெண்மணி என்னை மீண்டும் மீண்டும் தொடர்புக் கொண்டு சொன்னதால் சேகர்பாபுவிடம் அவரை பேச வைத்தேன். அதன் பிறகு ஸ்டாலினை பார்த்த போதும் அவரிடம் இந்த தகவலை சொன்னேன். ஏன் தொகுதி மாறி நின்று போட்டியிடுங்கள் என்றேன். அதற்கு அவரோ, "அப்படியெல்லாம் இல்லை நிர்வாகிகள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். யாருடைய பெயர்களும் தவறாக நீக்கப்படவில்லை" என்றார். இதனால் மீண்டும் சேகர்பாபுவிடமும் சொன்னேன். ஆனால் அவரும் எந்த தவறும் நடக்கவில்லை என கூறிவிட்டார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.எஸ்ஐஆர் நடவடிக்கை
சங் பரிவார் அமைப்பு
முகத்திரை கிழிந்தது
தனிப்பெரும்பான்மை
கெஜ்ரிவால் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.. SIRல் நடந்த குளறுபடி? பரபரக்கும் டெல்லி
அரவிந்த் கெஜ்ரிவால்
பெண் கொடுத்த பகீர் தகவல்
எந்த மாவட்டத்தில் எந்த தொகுதி? ஸ்டாலினிடம் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்! 2 நாட்களில் அறிவிப்பு
ஸ்டாலினிடம் சொன்னேன்