ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன்

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு தற்போது வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில், தமிழகத்திற்கு ரூ.13 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், திமுகதான் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "தவெக ஆட்சி குறித்து எதிர்க்கட்சி 6 மாத காலம் பொறுத்திருந்து பின்னர் விமர்சனம் செய்வோம் என்று கூறியிருக்கிறது. இப்படி இருக்கையில் ஒரே மாதத்தில் ஆட்சி பற்றி எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறோம். இப்போது அவர்கள் கற்றுக்கொள்கிற காலம் என்றுதான் சொல்ல வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    அதேபோல அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து கூறுகையில், "அதிமுகவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பதவியையே ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன நெருக்கடி என்பது எனக்கு தெரியாது. அது அவர்களுக்குதான் தெரியும்.

    அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்பதால் அக்கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பதுதான் தமிழக அரசியலுக்கு நல்லது என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். மீண்டும் இதையேதான் நான் வலியுறுத்துகிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது" என்று தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    இறுதியாக தவெக தனது வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.13 லட்சம் கோடி என்று குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பேசிய திருமாவளவன், "இது குறித்து ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் பதில் சொல்ல வேண்டும். இதில் கருத்து சொல்ல எனக்கு எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

    திமுக கூட்டணியில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என்றாலும், முழுமையாக தவெக கூட்டணியிலும் கட்சி இன்னும் இணையவில்லை. எப்போது வேண்டுமானாலும் தவெகவிடமிருந்து வெளியேறுவோம் என்று திருமாவளவன் கூறியிருந்தார். அப்படியெனில் இன்னும் திமுக பாசம் இருக்கிறதோ? என கேள்விகள் எழுந்தன. ஆனால், கடன் குறித்து அவர் அளித்துள்ள பதில், திமுக மீதான விசிகவின் பாசத்தை கேள்வி எழுப்பியிருக்கிறது.

    Advertisement

    முன்னதாக நேற்று வெளியான வெள்ளை அறிக்கையில், 2021-2026 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சொந்த வருவாய் குறைந்திருக்கிறது. வருவாயில் 3ல் 1 ரூபாய் வட்டிக்காக செலவிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடன் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகள், இணை மாநிலத்துடன் ஒப்பிடும் போது அதிக கடன் சுமையுடன் பிறக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Thirumavalavan: The government led by the Tamizhaga Vettri Kazhagam has released a white paper stating that Tamil Nadu has a debt of ₹13 lakh crore. Commenting on this, VCK leader Thirumavalavan has stated that the DMK must provide an explanation regarding the matter.