கிள்ளுக்கீரையா திருமாவளவன்? 45 MLAக்களுடன் கெத்து எடப்பாடி! நொறுங்கிய விஜய்யின் தூய சக்தி பிம்பம்?

  • சென்னை: "தவெக கூட்டங்களில் திருமாவளவன், வைகோ போன்ற மூத்த தலைவர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய மரியாதையும் இடமும் வழங்கப்படாமல் அவர்கள் மனப்புழுக்கத்துடன் இருக்கிறார்கள்.. பரிதாபத்திலும் பரிதாபமாக உள்ளார்கள்.. தேர்தல் பிரச்சாரத்துக்கும் அவர்களுக்கும் அழைப்பு இல்லையே? உள்ளூர் தலைவர்கள்கூட தொகுதிகளில் இல்லையே ஏன்?" என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் தவெகவின் வளர்ச்சியைத் தடுக்க திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக ஒன்றுசேர வாய்ப்பிருக்கிறது... கிராமங்களில் இதுவரை அப்பா ஒரு கட்சியிலும் மகன் மற்றொரு கட்சியிலும் இருந்து அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து வந்தனர்.

    Advertisement

    அதிமுகவை சாடும் தவெக

    ஆனால் 3வது கட்சியாக தவெக உள்ளே நுழைவது கிராமங்களின் அமைதியை கெடுக்கிறது. தவெக கூட்டங்களில் நாற்காலியில் ஏறி விசில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கட்சியின் தலைமைகூட ஊக்குவிப்பது போல தெரிகிறது. கூட்ட நெரிசல்களால் செய்தியாளர்கள் பேசுவதைக்கூட குறிப்பெடுக்க முடியாத அளவுக்கு குழப்பமான சூழல் நிலவுகிறது.

    முன்பு எம்ஜிஆர் காலத்தில் இளைஞர்கள் உற்சாகமாக இருந்தாலும், அதிமுகவில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இருந்ததால் தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தனர். ஆனால் இப்போது தவெகவில் முறையான சித்தாந்தமோ அரசியல் அனுபவமோ இல்லாத புதிய இளைஞர்கள் அதிகம் இருப்பதால் அந்த கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.

    Advertisement

    தூய சக்தி

    விஜய் தன்னை ஒரு தூய சக்தி என்று சொல்கிறார்.. ஆனால், அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து ஆதரவு பெற்றதும், விஜயபாஸ்கர் உட்பட ஊழல் புகார்களுக்கு ஆளான பலரைக் கட்சியில் இணைத்துக் கொண்டதும் அந்தப் பிம்பத்தையே அடித்து நொறுக்கிவிட்டது. ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களைச் சேர்த்தபோதே அந்தத் தூய சக்தி என்னும் கதை முற்றிலும் அடிபட்டுப் போய்விட்டது.

    எம்ஜிஆர் தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக விஜய் சொல்கிறார்.. எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா, அதற்கு பிறகு 4 வருடம் எடப்பாடி முதலமைச்சராக இருந்துள்ளார்.. 45 எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளார்... அப்படியிருந்தும் அதிமுகவை தீர்ந்துபோன கட்சி என்று எப்படி விமர்சிக்க முடியும்? அதனால்தானே எடப்பாடி பழனிசாமி கடுமையாக இறங்கியடித்து விமர்சிக்கிறார்.

    Advertisement

    ஸ்டாலின் - திருச்சி

    தேர்தல் பிரச்சாரங்களில் தரம் தாழ்ந்து போய் குடும்பத்தினரையும் அம்மாவையும் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும் நடக்கிறது. தாயை பற்றி பேசினால், யார் பேசியது என்பதையும் விஜய் சொல்லணும்தானே? ஸ்டாலின், எடப்பாடி யாருமே பேசவில்லையே? ஆனால், அப்பாவை காணோம் என்று பேசியது யார்? இப்படி துவக்கி வைத்தது விஜய்தான்.. திருச்சி கூட்டத்தில் டேஷ் போட்டு பேசியது யார்? கொத்து பரோட்டோ என்று பேசியது யார்?

    உடனே கீழே உள்ளவர்களும் விஜய் போலவே ஆரம்பித்துவிட்டார்கள்.. எதிர்க்கட்சியினர் எப்படி பேசினாலும், முதலமைச்சர் பதவியில் உள்ளவர்தான் இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனங்களுக்கு முதலில் வழிவகுக்கக் கூடாது. கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது அம்மாவை பற்றிப் பேசி கண்ணீர் விட்டது மக்களிடம் எடுபடவில்லை.. இப்போது செல்போன் காலத்தில் விஜய் பேசுவதால் மட்டும் பெண்கள் உடனடியாக அவர் பக்கம் வந்துவிட மாட்டார்கள்.

    Advertisement

    45 எம்எல்ஏக்கள் அதிமுக

    திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் குறிவைத்து பேசுவதன் மூலம் தேர்தல் களத்தை விஜய் தனக்கு எதிரான நேரடி மோதலாக மாற்ற விரும்புகிறார். 45 எம்எல்ஏக்களுடன் அதிமுக சட்டப்பேரவையில் பலமாகவே இருக்கிறது.

    தவெக கூட்டங்களில் திருமாவளவன், வைகோ போன்ற மூத்த தலைவர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய மரியாதையும் இடமும் வழங்கப்படாமல் அவர்கள் மனப்புழுக்கத்துடன் இருக்கிறார்கள்.. பரிதாபத்திலும் பரிதாபமாக உள்ளார்கள்.. தேர்தல் பிரச்சாரத்துக்கும் அவர்களுக்கும் அழைப்பு இல்லையே? உள்ளூர் தலைவர்கள்கூட தொகுதிகளில் இல்லையே.

    பாயிண்ட் பாயிண்ட்டாக

    கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்துக்கு வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.. திருமாவளவனுக்கு இதைவிட அவமானம் வேறில்லை.. சீனியர் தலைவரான அவரை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார்கள்.. இடதுசாரித் தலைவர் சண்முகம் மட்டும் தவெக அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தைரியமாக அம்பலப்படுத்தி வருகிறார்.. பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுகிறார்.

    Advertisement

    2 கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதற்குப் பதிலாக ஒரு 3வது கட்சி வருவது நல்லது என்று மக்கள் நினைத்தனர்.. ஆனாலும், தவெகவின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இல்லை.. கிரானைட் தொழிலதிபர் விவகாரத்தில், நீதிபதி பிறப்பித்த உத்தரவையும், தங்களது கட்சிக்கான வெற்றியாகக் காட்டிக் கொள்ள தவெக முயல்கிறது.. அத்துடன் திமுக மீதும் பழியை போடுகிறது.. எதை நோக்கி தவெக அரசியல் போகிறது? இது சீரழியும் அரசியலாக பார்க்கிறேன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Thirumavalavan Sidelined by Vijay’s TVK? Edappadi Palanisamy With 45 MLAs.. What Happened to the “Pure Force” Image?