அவசரப்பட்டுவிட்டோமா? விசிக வெளியிட்ட கூட்டணி அறிவிப்பு.. கண்டுகொள்ளாத விஜய்.. சிறுத்தைகள் வருத்தம்!

  • சென்னை: தவெக உடன் இனி அரசியல் இணைந்து பயணிப்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட போதும், முதல்வர் விஜய் தரப்பில் இருந்தோ, தவெக தலைமை தரப்பில் இருந்தோ எந்தவித ஆர்வமும் காட்டப்படவில்லை. இதனால் கூட்டணி அறிவிப்பை தேவையில்லாமல் அறிவித்துவிட்டோமோ என்ற வருத்தத்திற்கு விசிகவினர் வந்துவிட்டனர்.

    Advertisement

    ஆகஸ்ட் 17ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கூடிய இந்த மாநாட்டை ஒருங்கிணைக்க தவறியதால், விசிக தலைவர் திருமாவளவன் வெறும் 5 நிமிடங்களில் உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு வெளியேறினார். மேடைக்கு வருவதற்குள்ளாகவே திருமாவளவன் படாதபாடுபட்டார்.

    Advertisement

    அவருடன் செல்ஃபி எடுக்கவும், அவரை தொட்டு பார்க்கவும் விசிகவினர் மேடையில் ஏற தொடங்கினர். இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் யாருமே முன் வரவில்லை. ஒரு கட்டத்தில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நின்றது பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் பாதியில் விசிக முடித்து கொண்டது.

    இருப்பினும் தமிழ்நாட்டில் தவெக உடன் இணைந்து பயணிப்போம் என்ற அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டிருந்தார். தவெக - விசிக கூட்டணி அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்ட போது, விசிகவினர் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் ஏற்பட்டது. ஆனால் தவெக தலைமை மத்தியில் அந்த உற்சாகம் இதுநாள் வரை தென்படவில்லை. ஏனென்றால் விசிக மாநாட்டில் பங்கேற்க முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் விஜய் மறுப்பு தெரிவிக்கவே, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் கடைசி நேரத்தில் வரவில்லை என்று கைவிரித்துவிட்டனர். தவெக உடன் கூட்டணி அறிவிப்பை வெளியிடுகிறோம் என்று அறிவித்த போதும் கூட, அவர்கள் வரவில்லை என்று கூறி இருக்கின்றன.

    அதுமட்டுமல்லாமல் அடுத்த நாள் காலை முதல்வர் விஜய்யை சந்தித்தார் திருமாவளவன். திருமாவளவன் உடனான சந்திப்புக்கு பின்னரும் கூட விசிகவை கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்று ஒரு அறிக்கையை கூட முதல்வர் விஜய்யோ, தவெக தலைமையோ வெளியிடவில்லை. இதனால் அவசரப்பட்டு கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுவிட்டோமோ என்று விசிகவினர் வருத்தத்தில் இருக்கின்றனர்.

    Advertisement

    விசிகவினரின் உற்சாகத்திற்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்கள், முடிந்தால் ஒரு மேயர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணமே காரணம். ஆனால் தவெகவில் ஏராளமானோர் இணைந்து வருவதோடு, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டுமே என்பது முதல்வர் விஜய்க்கு பிரச்சனையாக திரும்பி இருக்கிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது, அதிருப்தி ஏற்படும் சூழல் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Thirumavalavan: Silence From Vijay TVK Leaves Thirumavalavan VCK Regretting Alliance Pitch