பாமகவை நெருங்கிய தவெக.. நேரம் பார்த்து காய் நகர்த்திய திருமாவளவன்.. கூட்டணி அறிவிப்பின் பின்னணி!

  • சென்னை: தமிழக அரசியலில் இனி தவெக - விசிக இணைந்தே பயணிக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே பாமக உடன் தவெக நெருக்கம் காட்டி வந்த நிலையில், திருமாவளவனின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

    Advertisement

    தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தவெக கூட்டணியில் விசிக இணைந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைத்த 100வது நாளில் விசிக தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடந்த மாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து முடிவு எடுக்கும் திருமாவளவன், இம்முறை தனித்தே கூட்டணி முடிவை எடுத்திருக்கிறார்.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், விசிக அவசர அவசரமாக கூட்டணி நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    விசிகவின் அறிவிப்பு தொடர்பாக இதுவரை முதல்வர் விஜய் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் திருமாவளவனின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் பாமக உடனான தவெகவின் நெருக்கமே காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே பாமக தலைவர் அன்புமணி முதல்வர் விஜய்யுடன் நெருக்கம் காட்டினார்.

    Advertisement

    அதேபோல் சட்டசபையில் செளமியா அன்புமணியின் செயல்பாடுகளும் பாராட்டும் வகையில் அமைந்தன. செளமியாவின் குரலுக்கு முதல்வர் விஜய்யும் செவி கொடுத்து வந்தார். அதன் உச்சமாக ராமதாஸ்க்கு தகைசால் தமிழர் விருது கொடுக்க தவெக முடிவு செய்தது. ஆனால் ராமதாஸ் மறுப்பு தெரிவித்ததால், உடனடியாக செளமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.

    இதன் மூலமாக தவெக - பாமக இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இதனால் திருமாவளவன் வேக வேகமாக கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து முதல்வர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பாமகவின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    English Summary

    Thirumavalavan: Thirumavalavan Announces VCK - TVK Alliance Amid Buzz Over PMK Closeness