தவெக - விசிக கூட்டணியை அறிவித்த நாளே.. முதல்வர் விஜய்யை சந்தித்து திருமாவளவன் ஆலோசனை!

  • சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தியுள்ளார். நேற்று நடந்த தமிழ்த் தேசிய மாநாட்டில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும் என்று கூட்டணி திருமாவளவன் வெளியிட்டிருந்த நிலையில், இன்று விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்க விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதில் ஐயூஎம்எல், காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய 3 கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்றன. அதேபோல் காங்கிரஸ் கட்சி இனி வரும் காலங்களில் தவெக உடன் உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்துவிட்டது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து தவெக தலைமையில் கூட்டணி அமைக்க முதல்வர் விஜய் தீவிரமாக இருந்தார். அதற்கேற்ப காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உடன் முதல்வர் விஜய் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் பங்கேற்றிருந்தார். அப்போது கூட்டணிக்கான பெயர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

    இருப்பினும் தவெக உடனான கூட்டணியில் விசிக இன்னும் இணையவில்லை என்று பேசி வந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் நடந்த விசிக மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், விசிக வரும் காலத்தில் ஆளுங்கட்சியாக வளர வேண்டும். இத்தனை காலம் நாம் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்தோம். திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியவை ஆளுங்கட்சியாக இருந்தன.

    Advertisement

    தற்போது சகோதரர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம். விசிக - தவெக இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என்று அறிவித்திருந்தார். தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு விசிக தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளான இன்று முதல்வர் விஜய்யை சந்திக்க விசிக தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகம் வந்துள்ளார். அவரை அமைச்சர் வன்னி அரசு வரவேற்று அழைத்து சென்றார். தொடர்ந்து முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    English Summary

    Thirumavalavan: Thirumavalavan Meets CM Vijay at Secretariat Day After announcing TVK - VCK alliance