அவங்கவங்க வேலையை பார்ப்போம்..திமுக - காங்கிரஸ் சண்டை நல்லதுக்கில்லை! திருநாவுக்கரசர் சீரியஸ் அட்வைஸ்

  • சென்னை: கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து திமுக இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது, திமுக அவர்கள் வேலையை பார்க்கட்டும் காங்கிரஸ் அவர்கள் வேலையை பார்க்கட்டும். ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொள்வது அவசியம் இல்லாதது நாகரீகம் அல்லாதது என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் 45வது நினைவு நாள் ஓட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்,.

    Advertisement

    அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சிபி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர்," பத்திரிக்கை உலகின் பிதாமகனாக தினத்தந்தி மூலமாக பல பத்திரிகை நிறுவனங்களை நிறுவி அறிவு புரட்சியை தமிழ்நாட்டில் உண்டாக்கியவர் சிபி ஆதித்தனார்.

    திருநாவுக்கரசர்

    சாதாரண கிராமத்தில் வாழக் கூடியவர்கள் கூட படிக்க செய்தவர் ஆதித்தனார். சிறந்த சபாநாயகராக, சிறந்த அமைச்சராக, சிறந்த பத்திரிக்கை நிறுவனராக பன்முகம் கொண்ட மிக பெரும் சக்தியாக இருந்தவர். ஆதித்தனார் புகழ் என்றும் தமிழர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும் இருக்க வேண்டும். காங்கிரஸை கண்டித்து திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழ்நாட்டிலும் சரி அகில இந்திய அளவிலும் சரி ஒரே கூட்டணியில் இருந்து ஒன்றாக செயல்பட்டு கொண்டுள்ளோம்.

    Advertisement

    திமுக காங்கிரஸ்

    காங்கிரஸ் அமைச்சரவை திமுக உறுப்பினர்களும் பணியாற்றி உள்ளார்கள். சட்டமன்ற நாடாளுமன்றங்களில் உள்ளாட்சிகளில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து வேறு வேறு நிலைப்பாட்டில் வேறு வேறு கூட்டணிகள் இருந்தாலும் கடந்த காலங்களில் ஒன்றாக கூட்டணியில் இருந்ததை நினைத்து திமுக இது போன்ற விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

    திமுக கூட்டணி

    கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்படுவதும் அந்தக் கூட்டணி பிரிவதும் வேறு வேறு கூட்டணி ஏற்படுவதும் தமிழ்நாட்டில் அதிசயமான ஒன்றுமல்ல கடந்த கால தேர்தல்களில் இது போன்ற கட்சிகள் மாறி மாறி கூட்டணி அமைக்கும் தேர்தலை சந்தித்துள்ளனர். திமுக கட்சி கூட காங்கிரஸ் அமைச்சரவை இருந்து கொண்டே பிஜேபி உடன் கூட்டணியில் சேர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள்.

    Advertisement

    சண்டை வேண்டாம்

    பலமுறை காங்கிரஸ் திமுக சேர்ந்தும் பிரிந்தும் செயல்பட்டு இருக்கிறது. உலகத்தில் முதல் முதலாக நடந்தது போல் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சனம் செய்வது, திமுக திட்டுவதும் காங்கிரஸ்காரர்கள் மீண்டும் திட்டுவது இன்னும் எவ்வளவு நாளைக்கு திட்டிக் கொண்டிருப்பது. திமுக அவர்கள் வேலையை பார்க்கட்டும் காங்கிரஸ் அவர்கள் வேலையை பார்க்கட்டும். தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்களால் முடிந்த பணிகளை செயல்படுத்த முற்படுவது தான் நல்லது.

    பாஜக

    ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக் கொள்வது அவசியம் இல்லாதது நாகரீகம் அல்லாதது. பல மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று விமர்சனம் வைத்தது குறித்த கேள்விக்கு, இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெற்றதால் தான் பாஜக ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் எதிர் கட்சியாக இருக்கிறது. இதில் புதுசாக கண்டுபிடிப்பதற்கு என்ன இருக்கிறது? வருங் காலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்" என்றார்.

    English Summary

    Congress leader Thirunavukkarasar advises DMK and Congress not to indulge in disrespectful criticism despite political differences.